Kerala Governor: கேரள ஆளுநருக்கு எதிரான வழக்கு ..உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
8 மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் காலதாமதம் செய்ததை எதிர்த்து கேரள அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரள ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் கூடுதல் செயலாளர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆரிஃப் கான் காலம் தாழ்த்தி வருவதாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளாகவும், 5 மசோதாக்கள் ஓா் ஆண்டாகவும் நிலுவையில் உள்ளன. இது மாநில மக்களின் உரிமையை மீறுவதாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று மசோதாக்கள் உட்பட பல மசோதாக்களை நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருப்பதன் மூலம் ஆளுநரால் மாநில மக்களுக்கும் அதன் பிரதிநிதித்துவ ஜனநாயக அமைப்புகளுக்கும் கடுமையான அநீதி இழைக்கப்படுவதாகவும் கேரள அரசு கூறியிருந்தது.
மக்களின் உரிமைகளை தோற்கடிக்கும் விதமாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது ஒப்புதலை தாமதப்படுத்துவதாகவும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ.20) தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்விவகாரத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க கேரள ஆளுநரின் கூடுதல் செயலாளர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (24.11.2023) ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்