தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Sunita Kejriwal Preparing To Hold Delhi Cm Post Like Rabri Devi: Hardeep Puri

Delhi CM: பீகாரில் ராப்ரி தேவி பாணியில் டெல்லி முதலமைச்சர் ஆக முயற்சிக்கும் சுனிதா கெஜ்ரிவால் - பாஜக அமைச்சர்கள் பேட்டி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 29, 2024 06:39 PM IST

ராப்ரி தேவியை பின்பற்றி அவர் பீகாரில் முதலமைச்சர் ஆனது போல், கெஜ்ரிவால் கைதுக்கு பின் அவரது மனைவி சுனிதாவும் டெல்லிக்கு முதலமைச்சர் ஆக முயற்சிக்கிறார் என பாஜக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக முயற்சிப்பதாக பாஜக அமைச்சர்  ஹர்தீப் சிங் பூரி குற்றச்சாட்டு
கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக முயற்சிப்பதாக பாஜக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குற்றச்சாட்டு

ட்ரெண்டிங் செய்திகள்

டெல்லி நடைபெற்ற பாஜக தேர்தல் அலுவலகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி. அவருடன் டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் பன்சூரி சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூரி கூறியதாவது, "நீங்கள் மேடம் என்று குறிப்பிடுபவர் பீகாரில் ராப்ரி தேவி செய்ததை போல், டெல்லியில் பதவியை வகிக்க தயாராகி வருகிறார்.

80 வயதான மூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் ஊழல் கட்சிக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கி, தற்போது அதே கட்சியுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டணி வைத்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்குவதாகக் கூறி அரசியலுக்கு வந்தார். ஆனால் இப்போது யாருடன் கூட்டணி வைத்துள்ளார்? அவர் கூட்டணி வைத்திருக்கும் கட்சி மிகவும் ஊழல் மிக்க கட்சியாக உள்ளது.

கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. தற்போது அதன் விளைவை சந்திக்கிறார். அவர் விட்டுவிட வேண்டும். அவருக்கான நேரம் குறைந்து விட்டது" என்றார்.

தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவர் மனோஜ் திவாரி, " உயர் நீதிமன்ற நீதிபதி அரவிந்த் கெஜ்ரிவால் கைதை தடுக்க முடியாது எனவும், அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார் எனவும் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினால் மட்டும் குற்றவாளி குற்றம் செய்யவில்லை என்று ஆகிவிடுமா? கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது மனைவி மட்டும் வருகிறார். டெல்லி மக்கள் ஏன் வரவில்லை என கூறியதாக" தெரிவித்தார்.

ராப்ரி தேவியை பின்பற்றுகிறார் சுனிதா கெஜ்ரிவால்

முன்னதாக, ராபிரி தேவியை பின்னபற்றி, கெஜ்ரிவால் கைதுக்கு பின் ஊடகத்தினரை சந்தித்து முதலமைச்சர் ஆக அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் முயற்சித்து வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்ட போது அவரது மனைவி ராப்ரி தேவி அறிவிப்புகளை வெளியிட தொடங்க படிப்படியாக முதலமைச்சர் ஆனார்.

அவரை போல் தற்போது கெஜ்ரிவால் கைதுக்கு பின் அவரது மனைவி சுனிதா, ராப்ரி தேவி பாணியை பின்பற்றி டெல்லி முதலமைச்சராக முயற்சிக்கிறார்.

வாட்ஸ் அப் பிரச்சாரத்தை அறிவித்த சுனிதா கெஜ்ரிவால்

வாட்ஸ் அப் எண் ஒன்றை பகிர்ந்து கெஜ்ரிவால் கோ ஆசிர்வாத் என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த எண்ணில் ஜெயில் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதங்களையும், பிரார்த்தனைகளையும் பகிரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் "மிகவும் ஊழல் மற்றும் சர்வாதிகார சக்திகளுக்கு" சவால் விடுப்பதாகவும், மக்கள் தங்கள் ஆசீர்வாதங்கள் மற்றும் பிரார்த்தனைகளின் மூலம் கெஜ்ரிவாலை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.

யார் இந்த சுனிதா கெஜ்ரிவால்?

இந்திய வருவாய் சேவைகள் (ஐஆர்எஸ்) 1994ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த அதிகாரியான சுனிதா, 1995 பேட்சை சேர்ந்த ஐஆர்எஸ் அலுவலரான அரவிந்த் கெஜ்ரிவாலை போபாலில் நடந்த பயிற்சி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். 22 ஆண்டுகள் அரசு சேவை புரிந்த சுனிதா வருமான வரித்துறையில் கடைசியாக பணியாற்றிய நிலையில், 2016இல் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட டெல்லி கலால் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குநரகம் மார்ச் 21 அன்று கைது செய்தது. இதையடுத்து கெஜ்ரிவாலுக்கான அமலாக்கத்துறை காவலை ஏப்ரல் 1 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்