தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Sudha Murty Thanks Pm Modi For Recognising Nari Shakti On Women's Day After Rajya Sabha Nomination

Sudha Murty: ’மகளிர் தினத்தில் பெண் சக்திக்கு அங்கீகாரம்’ பிரதமருக்கு சுதா மூர்த்தி நன்றி

Kathiravan V HT Tamil
Mar 08, 2024 08:46 PM IST

”Nari Shakti on Women's Day: இது மகளிர் தினத்தன்று வந்தது, அது இரட்டை ஆச்சரியம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நமது பிரதமருக்கு நான் நன்றியுள்ளவாக இருக்கிறேன் என சுதா மூர்த்தி கூறி உள்ளார்”

மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் சுதா மூர்த்தி
மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள எழுத்தாளர் சுதா மூர்த்தி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இன்போசிஸ் அறக்கட்டளையின் முன்னாள் தலைவரான 73 வயதான சுதா மூர்த்தி, கன்னடம் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் தனது பங்களிப்புக்காக புகழ் பெற்றவர், மேலும் சாகித்ய அகாடமி பால சாகித்ய புரஸ்கார், பத்மஸ்ரீ (2006) மற்றும் பத்ம பூஷன் (2023) ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

டெல்கோவில் பணிபுரிந்த முதல் பெண் பொறியாளரான மூர்த்தி, 80 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்க தனது அவசரகால நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபாயை தனது கணவர் என்.ஆர்.நாராயணமூர்த்திக்கு வழங்கியிருந்தார்.  இதுவே இன்போசிஸ் நிறுவனத்தின் அடித்தளமாக அமைந்தது. 

இவரது மகள் அக்ஷதா, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை திருமணம் செய்துள்ளார். 

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சுதா மூர்த்தி ஜியை மாநிலங்களவை உறுப்பினராக இந்திய ஜனாதிபதியிடம் பரிந்துரைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சமூக சேவை, தொண்டு மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதாஜியின் பங்களிப்புகள் மகத்தானவை மற்றும் ஊக்கமளிக்கின்றன" என்று பிரதமர் கூறினார். 

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள சுதா மூர்த்தி, பிரதமருக்கு நன்றி தெரிவித்ததுடன்,  தேசத்திற்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். மேலும் சர்வதேச மகளிர் தினத்தன்று அறிவிக்கப்பட்ட அறிவிப்பு இந்தியாவின் "பெண்கள் சக்திக்கு சக்திவாய்ந்த சான்று" என்று கூறி உள்ளார். 

"நமது மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களால் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது எனது பாக்கியம் மற்றும் கவுரவம்" என்றும் சுதா மூர்த்தி கூறினார்.

தாய்லாந்தில் இருந்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சுதா மூர்த்தி, ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டது தனக்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது என்றும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், "இது மகளிர் தினத்தன்று வந்தது, அது இரட்டை ஆச்சரியம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நமது பிரதமருக்கு நான் நன்றியுள்ளவாக இருக்கிறேன்.

"என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்று நான் பார்க்க வேண்டும்... நான் என்ன செய்ய முடியும். இது எனக்கு புதிய இடம். எனவே, நான் முதலில் உட்கார்ந்து படிக்க வேண்டும், பின்னர் என்னால் அதைச் செய்ய முடியும்" என்று கூறி உள்ளார். 

சுதா மூர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதற்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அனுராக் தாக்கூர், ஹர்தீப் பூரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.  

எழுத்தாளரான சுதா மூர்த்தி, ஆங்கிலம் மற்றும் கன்னட இலக்கியத்தில் பங்களித்துள்ளார் மற்றும் இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவராக டிசம்பர் 31, 2021 அன்று ஓய்வு பெற்றார். சமூகப் பணித்துறையில் இவர் செய்த பங்களிப்புக்காக 2023 ஆம் ஆண்டில் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில், இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்