Stock Market Crash: பங்குச்சந்தையில் 10 வினாடிகளில் ரூ.20 லட்சம் கோடி இழப்பு: காரணம் என்ன?
Stock Market Crash: இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 931 புள்ளிகள் சரிந்து 75,364.69-ஆகவும், இதே நிஃப்டி 346 புள்ளிகள் குறைந்து, 22,904.45-ஆகவும் முடிந்தன.

Stock Market Crash: பங்குச்சந்தையில் 10 வினாடிகளில் ரூ.20 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகளாவிய வர்த்தகப் போர் எதிரொலியாக மத்தியில் இந்திய சந்தைகள் 10 மாதக் குறைந்த அளவிற்கு சரிந்தன; டிரம்பின் கடுமையான வரிவிதிப்பு நிலைப்பாடு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தகர்த்து வருவதால், சென்செக்ஸ் கிட்டத்தட்ட 4,000 புள்ளிகள் சரிந்தது, நிஃப்டி 1,100க்கும் மேல் சரிந்தது என காரணங்கள் கூறப்படுகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான வரி விதிப்பு உலகளாவிய அளவில் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவை ஏற்படுத்தியதால், இந்திய பங்குச் சந்தைகள் இன்று பெரும் அடியைச் சந்தித்தன. முதலீட்டாளர்களின் ரூ.20 லட்சம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் நொடிகளில் இழப்பு ஏற்பட்டது, இது இந்தியாவின் பங்குச் சந்தை வரலாற்றில் மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சென்செக்ஸ் கிட்டத்தட்ட 4,000 புள்ளிகள் குறைந்து, 3.5% க்கும் மேல் சரிந்தது, அதே நேரத்தில் நிஃப்டி 50 ஆனது 1,100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
