தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Stephen Hawking's Life And Visionary Contributions To Science And God's Theory

HBD Stephen Hawking: ’கடவுள்தான் உலகை படைத்தாரா?’ ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தநாள் இன்று!

Kathiravan V HT Tamil
Jan 08, 2024 05:30 AM IST

“கடவுளின் இருப்பு பற்றிய அவரது கேள்விகள் பலரது கவனத்தை பெற்றது. கடவுள் கோட்பாடு குறித்த அவரது கருத்துக்கள் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது.”

ஸ்டீபன் ஹாக்கிங்
ஸ்டீபன் ஹாக்கிங்

ட்ரெண்டிங் செய்திகள்

21 வயதில், ஹாக்கிங்கிற்கு அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS) என்ற நரம்பியக்கடத்தல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.  அவரது கல்லூரி மற்றும் ஆய்வுபடிப்புகளுக்கு பிறகு, 1970களில் ஹாக்கிங்கின் மிக அற்புதமான கோட்பாடுகளில் ஒன்றான ’கருந்துளைகள்’ குறித்த ஆய்வை நடத்தினார். 

வானத்தில் உள்ள பொருட்கள் முற்றிலும் "கருப்பு" அல்ல, அவை கதிர்வீச்சுகளை வெளியிடுகிறது என்ற கருத்தை ஹாக்கிங் முன் வைத்தார். இது "ஹாக்கிங் கதிர்வீச்சு" என்று அழைக்கப்பட்டது.

அவரது விஞ்ஞான சாதனைகளுக்கு அப்பால், ஹாக்கிங் தத்துவங்களை நோக்கி சென்றார். குறிப்பாக கடவுளின் இருப்பு பற்றிய அவரது கேள்விகள் பலரது கவனத்தை பெற்றது. கடவுள் கோட்பாடு குறித்த அவரது கருத்துக்கள் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது. 

லியோனார்ட் ம்லோடினோவுடன் இணைந்து எழுதிய "தி கிராண்ட் டிசைன்" என்ற புத்தகத்தில், ஹாக்கிங், புவியீர்ப்பு மற்றும் குவாண்டம் இயக்கவியல் ஆகியவரை பிரபஞ்சம் தொடக்க காரணமாக அமைந்ததாக குறிப்பிடுகிறார்.  எனவே உலகை படைத்தவர் என்ற தத்துவத்தின்  தேவையை இது இல்லாமல் செய்கிறது என்பது ஹாக்கிங்கின் முன் மொழிவாக இருந்தது. 

ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட படைப்பாளியின் தேவை இல்லாமல், பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு அறிவியல் விளக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்று ஹாக்கிங் நம்பினார். 

ALS காரணமாக அவரது உடல் குறைபாடுகள் இருந்தபோதிலும், ஹாக்கிங்கின் குரல் உலகளவில் எதிரொலித்தது. அவரது உறுதியும், அறிவுத்திறனும், இயலாமையின் எல்லையைத் தாண்டி, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது. 

ஸ்டீபன் ஹாக்கிங் 2018 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி காலமானார். கடவுள் கோட்பாடு உட்பட பிரபஞ்சத்தின் ஆழமான கேள்விகளைப் பற்றி சிந்திக்க அவரது அறிவியல் ஆய்வுகள் வழிகாட்டியாக உள்ளது. 

WhatsApp channel

டாபிக்ஸ்