பாஸ்டேக் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அப்துல்லா எம்.பி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  பாஸ்டேக் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அப்துல்லா எம்.பி!

பாஸ்டேக் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அப்துல்லா எம்.பி!

Karthikeyan S HT Tamil
Aug 03, 2022 05:52 PM IST

பாஸ்டேக் கணக்குகள் தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி., எம்.எம்.அப்துல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

<p>திமுக மாநிலங்களவை எம்.பி., எம்.எம்.அப்துல்லா</p>
<p>திமுக மாநிலங்களவை எம்.பி., எம்.எம்.அப்துல்லா</p>

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும்போது நேர விரயம் ஆவதைத் தடுப்பதற்காக பாஸ்டேக் (FASTag) திட்டத்தை ஒன்றிய நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்தது. பாஸ்டேக் ஸ்டிக்கரை ஆக்டிவேட் செய்து தர 22 முக்கிய வங்கிகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக ரூ. 100 கட்டணமாக செலுத்தவேண்டும். அத்துடன் திரும்பப் பெறக்கூடிய ரூ.100 அல்லது ரூ.200 டெபாசிட் தொகையை செலுத்தவேண்டும்.

இதனிடையே பாஸ்டேக் கணக்குகளில் குறைந்தபட்ச கட்டாய வைப்பு நிதி தேவையில்லை என்று கடந்த 2021ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சில வங்கிகள் குறைந்தபட்ச கட்டாய வைப்பு நிதி இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதை தடுக்க கோரி இன்று மாநிலங்களவையில் திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அந்த தீர்மானத்தின் படி, சுங்க சாவடிகளில் போக்குவரத்து நெரிசலையும், காலதாமதங்களையும் குறைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பயணிகள் வாகனங்களின் பாஸ்டேக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச கட்டாய வைப்பு நிதி கட்டாயம் இல்லை என்று கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்து இருந்தது.

ஆனால், இன்றும் சில வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள பாஸ்டேக் கணக்குகளில் குறைந்தபட்ச கட்டாய வைப்பு நிதியை வைக்க நிர்பந்தித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பாஸ்டேக் பயனாளர்கள் தேவையான நிதி கணக்குகளில் இருக்கும் நிலையிலும் சுங்கசாவடிகளை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மேலும், சுங்கச்சாவடிகளின் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை குளறுபடிகளால் பாஸ்டேக் பயனாளிகள் இருமடங்கு கட்டணத்தை செலுத்த நேரிடுகிறது. அதனால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயனாளிகளுக்கு பல இடையூறுகள் ஏற்படுகின்றன. ஆகவே, ஒன்றிய அரசு இந்த விவாகரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் வாயிலாக அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.