Tamil News  /  Nation And-world  /  Southern Railway Apprentice Recruitment 2024: Apply For 2860 Posts

Southern Railway: தெற்கு ரயில்வேயில் 2860 அப்ரண்டிஸ் பணி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 03, 2024 03:15 PM IST

தெற்கு ரயில்வே அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தெற்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
தெற்கு ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

ஜனவரி 29 முதல் பதிவு செய்வது தொடங்கப்பட்டது. பிப்ரவரி 28, 2024 அன்று பதிவு செய்வது முடிவடைகிறது. தகுதி, தேர்வு செயல்முறை மற்றும் பிற விவரங்கள் பின்வருமாறு.

தகுதி வரம்பு

கல்வி தகுதி

பிட்டர்: 10+2 கல்வி முறையின் கீழ் 10ஆம் வகுப்பில் (குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வெல்டர் (கேஸ் மற்றும் எலெட்ரிக்) : 10+2 கல்வி முறையின் கீழ் 10ஆம் வகுப்பில் (குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ ஆய்வக டெக்னீசியன்: இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலுடன் (குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன்) 10+2 கல்வி முறையின் கீழ் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதேபோல் முன் அனுபவம் இல்லாதவர்கள்/ E-ITI, MLT படித்த விண்ணப்பதாரர்கள் முறையே 22 / 24 வயதை பூர்த்தியடைந்திருக்கக்கூடாது.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் மற்றும் ஐடிஐ தேர்வுகள் இரண்டிலும் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் சராசரியை எடுத்து, இரண்டுக்கும் சம வெயிட்டேஜ் கொடுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்

பிராசசிங் கட்டணம் ரூ. 100/- + சேவைக் கட்டணம் ஆகியவற்றை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ ST/ PwBD/ பெண்கள் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. கூடுதல் தகவல்களை தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் காணலாம்

WhatsApp channel