தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Sonia Gandhi Slammed Bjp Government

சுதந்திர போராட்ட வீரர்களை கொச்சைப்படுத்துவதா? - சோனியா கடும் விமர்சனம்

Karthikeyan S HT Tamil
Aug 15, 2022 02:00 PM IST

அரசியல் ஆதாயங்களுக்காக நாட்டின் சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடும் முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி

ட்ரெண்டிங் செய்திகள்

நாடு முழுவதும் இன்று 76ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி இன்று காலை தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இதனிடையே கர்நாடக மாநில அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் சுதந்திர தின விளம்பரங்களில் நாட்டின் முதல் பிரதமர் நேருவின் புகைப்படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படும் சுயநலம் கொண்ட அரசு என்று சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " நண்பர்களே கடந்த 75 ஆண்டுகளில் நாம் பெரிய அளவில் சாதித்துள்ளோம். ஆனால், இன்றைக்கு சுயநலம் கொண்ட அரசு நமது சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்களையும், நாட்டின் பெருமைமிக்க சாதனைகளையும் கொச்சைப்படுத்துகிறது. அரசியல் ஆதாயங்களுக்காக வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பதையும், மகாத்மா காந்தி, நேரு, வல்லபாய் படேல், அபுல்கலாம் ஆசாத் போன்ற தலை சிறந்த தலைவர்களை பொய்யின் அடிப்படையில் அவமதிப்பதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது." என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

WhatsApp channel

டாபிக்ஸ்