Telangana Assembly Polls: ’காங். ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு 2,500’ தெலங்கானாவில் சோனியா அதிரடி அறிவிப்பு!
”தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது”
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தெலங்கான மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி அறிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ரங்காரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், "தெலுங்கானா மக்களின் எண்ணங்களை நிறைவேற்ற, நாங்கள் ஆறு உத்தரவாதங்களை அறிவிக்கிறோம். அவை ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று என பேசினார்.
மகாலட்சுமி திட்டத்தின் கீழ் தெலுங்கானாவில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் நிதியுதவி, கேஸ் சிலிண்டர்களுக்கு மாதம் 500 ரூபாய் மானியம், மாநிலம் முழுவதும் தெலங்கானா அரசுப்பேருந்துகளில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்த சோனியா காந்தி, இந்த மாபெரும் மாநிலமான தெலுங்கானாவின் பிறப்பில் நானும் எனது சகாக்களும் இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தது. இப்போது அதை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்வது நமது கடமை என சோனியாகாந்தி தெரிவித்தார்.
தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.