ஸ்லீப்பர் செல்கள் இயக்கம்: காஷ்மீரில் முக்கிய சுற்றுலாத் தளங்கள் மூடல்.. என்ன நடக்கிறது பள்ளத்தாக்கில்?
காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதிக்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் அரசு உஷார் நிலையில் உள்ளது. யூனியன் பிரதேசத்தில் பாதிக்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பயங்கரவாத தாக்குதல்கள் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் 22 அன்று, பஹல்காமின் பைசரனில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
ஸ்லீப்பர் செல்கள் இயக்கம்
இந்தியா டுடே அறிக்கையின்படி, 87 சுற்றுலா தலங்களில் 48 இடங்களை மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பள்ளத்தாக்கில் மேலும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. தகவல் தொடர்புகளை இடைமறித்த பின்னர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பள்ளத்தாக்கில் ஸ்லீப்பர் செல்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஸ்லீப்பர் செல்களை இயக்க அறிவுறுத்தல்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
