Tirupati: திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை!
இதுவரை 6 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் அவ்வவ்போது சிறுத்தைகள் சுற்றி திரிவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பதி மலைப்பகுதியில் வைக்கப்பட்ட கூண்டுகளில் இன்று மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டுள்ளது. இதுவரை வரை 6 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளது.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகள் வழியாக நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமி லக்ஷிதாவை வனப்பகுதிக்குள் சிறுத்தை தூக்கிச் சென்று கடித்துக் குதறியது. இந்த சம்பவத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோர்களுடன் அலிபிரி நடைபாதையில் நடந்த சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றதையடுத்து சிறுத்தையை கூண்டு வைத்து அதிகாரிகள் பிடிக்க முடிவு செய்தனர்.
அதன்படி அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் உள்ள வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டது. இதுவரை இந்த கூண்டுகளில் 6 சிறுத்தைகள் பிடிபட்டன. இந்த சிறுத்தைகள் திருப்பதி வன உயிரின பூங்காவில் விடப்பட்டன. இந்த நிலையில்,இன்று காலை ஒரு சிறுத்தை மலைப்பகுதிகளில் உள்ள நரசிம்ம சாமி கோயில் அருகே வைக்கப்பட்ட கூண்டில் சிக்கி கொண்டது.
பிடிபட்ட சிறுத்தையை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுவரை 6 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் அவ்வவ்போது சிறுத்தைகள் சுற்றி திரிவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்