Delhi Hospital Fire: டெல்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..6 பச்சிளங் குழந்தைகள் பலியான சோகம்!
Delhi Hospital Fire: டெல்லி குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு டெல்லியின் விவேக் விஹாரில் உள்ள குழந்தை பராமரிப்பு மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மீட்கப்பட்ட 12 குழந்தைகளில் குறைந்தது ஆறு புதிதாகப் பிறந்த பச்சிளங் குழந்தைகள் இறந்துள்ளன. ஒரு குழந்தை வென்டிலேட்டரிலும், மற்ற ஐந்து குழந்தை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறது.
பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மருத்துவமனையில் இருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், 6 குழந்தைகள் உயிரிழந்தன.ஏனைய குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
விரைந்த தீயணைப்பு வாகனங்கள்
டெல்லி தீயணைப்பு சேவைகள் (டி.எஃப்.எஸ்) ஒன்பது தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி தீயை அணைக்க அனுப்பியது. கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து குழந்தைகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், முழு கட்டிடமும் தீப்பிடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.