தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

Kathiravan V HT Tamil
May 04, 2024 07:20 PM IST

”பிரிஞ்வெல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் ஹெச்,டி,ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து உள்ளது”

பிரிஞ்வெல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் ஹெச்,டி,ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து உள்ளது.
பிரிஞ்வெல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் ஹெச்,டி,ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

பாலியல் வீடியோ புகாரில் சிக்கி ஜெர்மனியில் தலைமறைவாக உள்ள ஹாசன் எம்.பி பிரிஜ்வெல் ரேவண்ணா இவரது தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 

பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளான மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் ஹெச்.டி.ரேவண்ணாவின் மகன் கடத்தல் வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தல் வழக்கை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்தனர்.

ஹெச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றனர்.

மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் மகன் ரேவண்ணா மற்றும் அவரது நம்பிக்கைக்குரிய சதீஷ் பாபன்னா ஆகியோர் மீது மைசூருவில் வியாழக்கிழமை இரவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

கடத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளனர்.  

முன்னதாக, பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிக்கான சிறப்பு நீதிமன்றம் "ஆபாச வீடியோக்கள்" வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் ஹெச்.டி.ரேவண்ணா மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது.

ஹெச்.டி.ரேவண்ணாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கடத்தல் வழக்கின்படி, அந்தப் பெண் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ரேவண்ணா வீட்டில் பணிபுரிந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டு வெளியேறினார். ஏப்ரல் 26 ஆம் தேதி ரேவண்ணாவின் உதவியுடன் அந்த பெண் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன் பின்னர் காணாமல் போனதாகவும் அவரது மகன் புகாரில் குற்றம் சாட்டினார்.

தற்போதைய எம்.பி.யும் ஹாசன் மக்களவை வேட்பாளருமான பிரஜ்வால் ரேவண்ணா தனது தாயை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வீடியோவின் அடிப்படையில்,  தாயை காணவில்லை என்று அவர் தனது புகாரில் குற்றம் சாட்டினார்.

ஹோல்நார்சிபுரா எம்.எல்.ஏ மற்றும் அவரது கூட்டாளி மீது ஐபிசியின் பிரிவுகள் 364 ஏ (மீட்கும் நோக்கத்துடன் கடத்தல்), 365 (தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் கடத்தல்) மற்றும் 34 (பொதுவான நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கே.ஆர்.நகர் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், ஹெச்.டி.ரேவண்ணா முதல் குற்றவாளியாகவும், பபண்ணா என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபரை இரண்டாவது குற்றவாளியாகவும் வழக்குப்பதிவு செய்யபப்ட்டு உள்ளது. 

பிரிஜ்வெல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் கர்நாடக அரசியலை உலுக்கி வரும் நிலையில், ஹெச்.டி.ரேவண்ணா கைது பெரும் சலசலைப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதியில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், வரும் மே 7ஆம் தேதி அன்று நடைபெற உள்ள மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் போது எஞ்சி உள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

IPL_Entry_Point