Singappenney : சுதந்திர போரில் சிறை சென்ற போராளி.. முதல் பெண் அமைச்சர் ருக்மணி லட்சுமிபதி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Singappenney : சுதந்திர போரில் சிறை சென்ற போராளி.. முதல் பெண் அமைச்சர் ருக்மணி லட்சுமிபதி!

Singappenney : சுதந்திர போரில் சிறை சென்ற போராளி.. முதல் பெண் அமைச்சர் ருக்மணி லட்சுமிபதி!

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 25, 2023 08:18 PM IST

சென்னை எழும்பூரில் இருந்த மார்ஷெல் சாலைக்கு ருக்மணி லட்சுமி பதியின் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ருக்மணி லட்சுமிபதி பிறந்தநாள்
ருக்மணி லட்சுமிபதி பிறந்தநாள்

அந்த வகையில் சுதந்திர போராட்ட வீராங்கனையும், முதல் பெண் அமைச்சரும், துணை சபாநாயகருமான ருக்மணி லட்சுமிபதி குறித்து இங்கு பார்க்கலாம்.

பிறப்பு

ருக்மணி லட்சுமிபதி சென்னை விவசாய குடும்பத்தில் 1892ல் டிசம்பர் 6 ந் தேதி பிறந்தார். இவரது தாத்தா ராஜா டி. ராம்ராவ். இவர் அன்றைய நாளில் பெரும் நிலக்கிழாராக இருந்தார்.

ருக்மணி லட்சுமிபதி தனம்மாளிடம் வீணை கற்றார். பின்னாளில் அனைத்திந்திய வானொலியில் பல வீணை கச்சேரிகளை நடத்தினார். கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ படித்து பட்டம் பெற்றார்.

1923 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்த ருக்மணி 1926 ஆம் ஆண்டு பெண்கள் வாக்குரிமை கூட்டணி கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

சுதந்திர போராட்டமும் ருக்மணி லட்சுமிபதியும்

1930 வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் காந்தியடிகளின் உப்பு சத்தியா கிரக போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற முதல் பெண் ருக்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

1934-ம் ஆண்டு மெட்ராஸ் லெஜிஸ்லேடிங் கவுன்சில் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார். பின்னர் 1937 சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக போட்டுயிட்டு அதிலும் வெற்றி கண்டார். இந்நிலையில் 1937இல் ஜூலை 15ஆம் தேதி சட்டப்பேரவை துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இவர் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர் ஆவார். 1946 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி முதல் 1947 ஆம் ஆண்டு 23ஆம் தேதி வரை பொது சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றினார்.

காந்தியடிகளின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அரசியலில் கால் வைத்த ருக்மணி லட்சுமிபதி சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்து கொண்டதோடு பெண்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டார்.

மரணம்

இவர் 1951ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இயற்கை எய்தினார். இவரது நினைவை போற்றும் வகையில் 1997ல் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

சென்னை எழும்பூரில் இருந்த மார்ஷெல் சாலைக்கு ருக்மணி லட்சுமி பதியின் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்படி தன் வாழ்நாளில் இந்திய விடுதலை போராட்டத்திற்காக கடுமையாக உழைத்த ருக்மணி லட்சுபதியின் பிறந்தநாள் இன்று இந்த நாளில் அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பெருமிதம் கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.