Sikkim CM Wife Quits MLA: ஒரு நாள் எம்எல்ஏ..! பதவியை ராஜினாமா செய்த முதலமைச்சர் மனைவி - சிக்கிம் அரசியலில் பரபரப்பு
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் கிருஷ்ண குமாரி ராயின் ராஜினாமாவை சபாநாயகர் எம்.என்.ஷெர்பா ஏற்றுக்கொண்டதாக சட்டமன்ற செயலாளர் லலித் குமார் குருங் தெரிவித்தார். எம்எல்ஏவாக பதிவி ஏற்ற மறுநாளில் ராஜினாமா செய்து ஒரு நாள் எம்எல்ஏ ஆக இருந்துள்ளார். கிருஷ்ண குமாரி ராய் சிக்கிம் முதலமைச்சர் மனைவி ஆவார்.

சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ண குமாரி ராய் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பதிவியேற்ற மறுநாளில் அவர் ராஜினாமா செய்திருப்பது சிக்கிம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சிக்கிம் மாநிலத்தில் முடிவடைந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம்ச்சி-சிங்கிதாங் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ண குமாரி ராய் சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எஃப்) வேட்பாளர் பிமல் ராயை தோற்கடித்தார்.
இதையடுத்து சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் கிருஷ்ண குமாரி ராயின் ராஜினாமாவை சபாநாயகர் எம்.என்.ஷெர்பா ஏற்றுக்கொண்டதாக சட்டப்பேரவை செயலாளர் லலித் குமார் குருங் தெரிவித்துள்ளார்.
சிக்கிம் முதலமைச்சர் தமாங் விளக்கம்
சிக்கிம் முதலமைச்சரான பிரேம் சிங் தமாங், அருணாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர் பெமா காண்டுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்போது அவர் தனது பேஸ்புக்கில் பதிவில், "எனது மனைவி ராஜினாமா செய்த செய்தி தொடர்பாக... கட்சியின் ஒருமித்த முடிவுக்கு இணங்க, அதன் நலன் மற்றும் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளித்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பதை சிக்கிமின் அன்பான மற்றும் மரியாதைக்குரிய மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்."
"எஸ்.கே.எம் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் வேண்டுகோளின் பேரில், அவர் எங்கள் கட்சியின் நலனுக்காக தேர்தலில் போட்டியிட்டார். எங்கள் கட்சியின் சார்பாக, தலைவராக, அவரது அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தமாங் குறிப்பிட்டுள்ளார்.
சிக்கிம் மக்களுக்கு சேவை செய்ய உண்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள செயல்பாட்டாளர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க கட்சி உறுதிபூண்டுள்ளது. நாம்ச்சி-சிங்கிதாங் தொகுதியைப் பொறுத்தவரை, அங்கிருக்கும் குடியிருப்புவாசிகள் அர்ப்பணிப்புள்ள மற்றும் உண்மையான எம்.எல்.ஏ.வைப் பெறுவார்கள்" என்றும் எஸ்.கே.எம் கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.
"புதிய வேட்பாளர், மேடம் கிருஷ்ணா ராய் ஆகியோருடன் நானும் இணைந்து மூன்று பிரதிநிதிகளின் கவனிப்பு தொகுதியின் மீதும், அதன் பயனாளர்கள் மீது இருப்பதை உறுதி செய்கிறோம். உங்கள் தேவைகளை நிவர்த்தி செய்வதில் நாங்கள் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளோம்" என்று முதலமைச்சர் தமாங் கூறியுள்ளார்.
கிருஷ்ண குமாரி ராய் மிக பெரிய வெற்றி
கடந்த ஏப்ரல் மாதம் நாடளுமன்ற தேர்தலுடன், சிக்கிம் மாநிலத்தில் 11வது சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்று முடிந்தது. மொத்தம் உள்ள 32 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆளும் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31இல் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
நாம்ச்சி-சிங்கிதாங் தொகுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா சார்பில் போட்டியிட்ட கிருஷ்ண குமாரி ராய், 7907 வாக்குகளை பெற்றார். இவருக்கு அடுத்து இரண்டாவது இடம் பிடித்த எஸ்டிபி கட்சி வேட்பாளர் பிமல் ராய் 2605 வாக்குகள் பெற்றார். இதையடுத்து 5,302 வாக்குகள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றார்.
இதைத்தொடர்ந்து எம்எல்ஏவாக பதிவியேற்ற மாறுநாளில் தனது பதிவியை கிருஷ்ண குமாரி ராய் ராஜினாமா செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
