Shilpa Shetty: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிய உத்தரவு!
Shilpa Shetty: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது மோசடி வழக்குப் பதிய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Shilpa Shetty: நடிகை ஷில்பா ஷெட்டி மீது மோசடி வழக்குப் பதிய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தங்க நகைத் திட்டம் மூலம், நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் தன்னை மோசடி செய்துவிட்டதாக வியாபாரி ஒருவர் புகாரளித்து, நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்த நிலையில், அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யும்படி, போலீஸாருக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ராஜ்குந்த்ரா ஏற்கனவே, ஆபாசப்படம் தயாரிப்பில், பணமோசடி, கிரிப்டோ ஊழல் எனப் பல ஊழல் வழக்குகளில் கைதானது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா என்ன செய்தனர்?:
நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீதான மோசடி வழக்கை விசாரிக்க மும்பை நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. தங்கத் திட்டத்தில் முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததாக, டின்சல் நகர தம்பதியினரான நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது புகார் உள்ளது.
பிடிஐ அறிக்கையின்படி, கூடுதல் அமர்வு நீதிபதி என்.பி. மேத்தா கூறியதாவது, ’’ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோரால் நிறுவப்பட்ட நிறுவனமான சத்யுக் கோல்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் மற்றும் ஒரு ஊழியர் ஆகியோருக்கு எதிராக 'முதன்மையாக அடையாளம் காணக்கூடிய குற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டார்.
விசாரணை அறிக்கையின்படி, ரித்தி சித்தி புல்லியன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிருத்விராஜ் கோத்தாரி என்பவர் தாக்கல் செய்த புகாரின் பேரில் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு, பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் காவல் நிலையத்துக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ், மோசடி மற்றும் கிரிமினல் நம்பிக்கை மீறல் ஆகியவற்றுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகள்
ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் 2014ஆம் ஆண்டில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகவும், இதன் கீழ் முதலீடு செய்ய விரும்பும் எவரும் விண்ணப்பிக்கும்போது, தள்ளுபடி விலையில் தங்கத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என கூறியிருந்ததாக, பிருத்விராஜ் கோத்தாரி என்பவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்புக்கொள்ளப்பட்ட அளவு தங்கம் முதிர்வு தேதியில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஏப்ரல் 2, 2019 அன்று 5,000 கிராம் 24 காரட் தங்கம் கிடைக்கும் என்ற உறுதியின் பேரில் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், பிருத்விராஜ் கோத்தாரி, ரூ .90,38,600 முதலீடு செய்தார்.
வாக்குறுதியளிக்கப்பட்ட அளவு தங்கம் முதிர்வு தேதியிலும், அதற்குப் பிறகும் தனக்கு வழங்கப்படவில்லை என்று கோத்தாரி குற்றம்சாட்டினார்.
இது முற்றிலும் போலியான திட்டம் என்று கூறிய பிருத்விராஜ் கோத்தாரி, நடிகை ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் சதி செய்ததாகவும், ஒருவருக்கொருவர் உடந்தையாக இருந்ததாகவும், குற்றம்செய்ததாகவும் பிருத்விராஜ் கோத்தாரி குற்றம்சாட்டினார்.
முன்னதாக பாஸ்டியன் என்னும் உணவகம் நடத்தி வந்த தொழிலதிபரான ராஜ் குந்த்ராவுடன், 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், ஷில்பா ஷெட்டி. இவர்களுக்கு மே 2012ல் வியான் என்னும் ஒரு மகனும், சமிஷா ஷெட்டி என்ற பெண் குழந்தையும் இருக்கிறது. மேலும் ராஜ்குந்த்ரா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை நிறுவனர்களில் ஒருவராக இருக்கிறார்.
டாபிக்ஸ்