Shakira: கொலம்பியாவில் பிரபல பாடகி ஷகிராவுக்கு 21.3 அடி உயர சிலை!
இந்த சிலையின் வீடியோ மற்றும் புகைப்படங்களை ஷகிரா பகிர்ந்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற பாடகி ஷகிராவின் 6.5 மீட்டர் உயர வெண்கலச் சிலை அவரது சொந்த ஊரான கொலம்பியாவில் அமைக்கப்பட்டுள்ளது. "ஹிப்ஸ் டோன்ட் லை" போன்ற அவரது பாடல்களிலிருந்து அவரது நடன போஸ் இந்த சிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை சிற்பி யினோ மார்க்வெஸ் மற்றும் அவரது மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஷகிரா புதன்கிழமை இன்ஸ்டாகிராமில் சிலையின் வீடியோ மற்றும் படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில், அவரது பெற்றோர் சிலையின் முன் போஸ் கொடுப்பதைக் காணலாம். திறப்பு விழாவின் போது, பரன்குயில்லா நகர மேயரும் உடனிருந்தார்.
கொலம்பியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற பாடகி சிலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு பலகையின் படத்தையும் பகிர்ந்துள்ளார், அதில் அவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் உள்ளன. அந்த பலகையில் அவரது பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் "மக்களை நகர்த்தும் குரல்" என்று அவரைப் பாராட்டும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
இதற்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தலங்களில் எவ்வாறு எதிர்வினையாற்றினார்கள் என்பது இங்கே.
"அது அழகாக இருக்கிறது, அது முற்றிலும் உங்களைப் போலவே தெரிகிறது! உங்கள் பெற்றோர் மிகவும் பெருமைப்பட வேண்டும்!," என்று ஒரு பயனர் எழுதினார்.
"இது அற்புதமானது மற்றும் மிகவும் தகுதியானவர் ஷகிரா, ஏனென்றால் நீங்கள் நம்பமுடியாத திறமையான கலைஞர் மட்டுமல்ல, நீங்கள் ஒரு அழகான மனிதர், தனது மக்களை மறக்கவில்லை, அவர்களுக்காக தொடர்ந்து நிறைய செய்கிறீர்கள்" என்று மற்றொரு நபர் கருத்து தெரிவித்துள்ளார்.
"இதற்கு நீங்கள் தகுதியானவர்!! உங்களை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்" என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.
Waka Waka, Loca, Rabiosa, She Wolf போன்ற பாடல்களுக்காக ஷகிரா நன்கு அறியப்பட்டவர். 2023 ஆம் ஆண்டில், கூகுளில் உலகில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் இவரும் ஒருவர். முன்னாள் கணவர் ஜெரார்ட் பிக் பற்றிய அவரது பாடல், இந்த ஆண்டு லத்தீன் அமெரிக்காவில் யூடியூப் சாதனைகளை முறியடித்தது.
டாபிக்ஸ்