Stock Market: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு; நிஃப்டி 21,600 புள்ளிகளில் வர்த்தகம்
Sensex, Nifty today: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 71,660 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் நிஃப்டி 21,600 புள்ளிகளில் வர்த்தகம்
பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் buying காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சரிந்திருந்த ஈக்விட்டி பெஞ்ச்மார்க் குறியீடுகள் வியாழக்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் மீண்டன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 351.88 புள்ளிகள் உயர்ந்து 71,708.48 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 21,616.35 புள்ளிகளாக உள்ளது.
சென்செக்ஸ் நிறுவனங்களில் பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், இன்போசிஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, நெஸ்லே, டைட்டன் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை முக்கிய வின்னர்ஸாக இருந்தன.
ஹெச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், மாருதி, பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின. ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை எதிர்மறையாக மேற்கோள் காட்டின.
அமெரிக்க சந்தைகள் புதன்கிழமை சரிவுடன் முடிந்தன.
சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.27 சதவீதம் உயர்ந்து 78.46 டாலராக உள்ளது.
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமை ரூ.666.34 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 535.88 புள்ளிகள் சரிந்து 71,356.60 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 148.45 புள்ளிகள் சரிந்து 21,517.35 புள்ளிகளாக உள்ளது.
பொறுப்புத்துறப்பு: மேலே உள்ள பார்வைகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள், வல்லுநர்கள் மற்றும் தரகு நிறுவனங்களின் கருத்துகள் ஆகும். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கருத்துக்கள் அல்ல. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன், சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு முதலீட்டாளர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
டாபிக்ஸ்