Seat belt law: கார்களின் அனைவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும்!
கார்களில் பின்பக்கம் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
வாகனங்களில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஏனென்றால் விபத்துகளின் போது பலர் உயிர் இழக்கின்றன. கார்களின் முன்னால் அமர்ந்து பயணம் செய்பவர்கள் மட்டும் சீட் பெல்ட் அணிந்தால் போதும் என அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் காரின் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும்.
இந்தச் சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. இருப்பினும் இதனை பலரும் கண்டு கொள்வதில்லை. தற்போது இந்த விவகாரம் தலையெடுக்கக் காரணம் டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி தனது வேலை உயர்ந்த காரில் பயணம் செய்த போது விபத்து ஏற்பட்டு உயிர் இழந்தார். சீட் பெல்ட் அணியாதது இந்த உயிருள்ளப்புக்கு காரணம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இந்தியாவில் கார்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும். கார்களின் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் சீட்டு பெல்ட் அணிய வேண்டும், அந்த வசதிகளை கொடுக்காத கார் நிறுவனங்கள் கட்டாயம் காரின் பின்பக்கத்திலும் சீட்டு பெல்ட் வசதி வழங்க வேண்டும் என ஒன்றிய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவின் பேரில் தற்போது மும்பை நகரத்தில் கார்களின் பின்புறம் அமர்ந்து வரும் பயணிகள் இனி கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
அப்படி சீட் பெல்ட் அணியாமல் வந்தால் மோட்டார் வாகனச் சட்டம் 2019 செக்ஷன் 19 (B)(1) விதிப்படி கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமானது சில நகரங்களில் மட்டுமே தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது முதல் முறையாகத் தலைநகர் டெல்லியில் இந்த சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.