SC: ஓபிஎல் மேல்முறையீடு - நீதிமன்றம் தலையிட்டால் அதிமுக நிலைமை மோசமாகிவிடும் - உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
அதிமுக பொதுக் குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் நிலைமை மோசமாகிவிடும் என கருத்து தெரிவித்த நீதிபதி, இந்த கோரிக்கையை முன்வைத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தலையிட முடியாது என கருத்து தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிர்வாகிகள் நீக்கம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து ஓ. பன்னீர் செல்வும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய விசாரணை மேற்கொண்டது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மனு மீதான விசாரணை மீண்டும் இன்று நடைபெற்றது. அப்போது ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், குரு கிருஷ்ணகுமார், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர், கட்சி விதிகளின்படி நீக்க செய்யப்படவில்லை எனவும், இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க அதிமுகவில் விதி எதுவும் எனவும் வாதிடப்பட்டது. அத்துடன் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதன் பின்னர் நீதிபதிகள், பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவில் தலையிட விரும்பவில்லை. இடைக்கால தடை விதித்தால் வழக்கை ஏற்றுக்கொண்டதாக ஆகி விடும். நீதிமன்றம் இதில் தலையிட்டால் உள்கட்சி பிரச்னையானது பெரிதாககூடும் எனவும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் அதிமுக நிலைமை மேலும் மோசமாகும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சிவில் சூட் வழக்குகளை கீழமை நீதிமன்றம் விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்