Hemant Soren : ஹேமந்த் சோரன் கைது நடவடிக்கையில் தலையிட மறுக்கும் உச்ச நீதிமன்றம்: உயர் நீதிமன்றத்தை நாட உத்தரவு!
ஹேமத் சோரன் கைது நடவடிக்கையில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அவரது வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமத் சோரனை அமலாக்கத்துறை கைது செய்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் அவரது வழக்கறிஞர்களைக் கேட்டுக் கொண்டது.
சோரன் சார்பில் ஆஜரான கபில் சிபலிடம், "நீங்கள் ஏன் உயர் நீதிமன்றத்தை அணுகக்கூடாது" என்று கேள்வி எழுப்பியது. இந்த வழக்கு கைது செய்யப்பட்ட ஒரு முதலமைச்சர் தொடர்பானது என்று கபில் சிபல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
"நீதிமன்றங்கள் அனைவருக்கும் திறந்திருக்கும், உயர் நீதிமன்றங்கள் அரசியலமைப்பு நீதிமன்றங்கள்" என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
முன்னதாக, நில மோசடி வழக்கில் பணமோசடி விசாரணை தொடர்பாக விசாரணையைத் தொடர்ந்து சோரனை மத்திய நிறுவனம் புதன்கிழமை கைது செய்தது. அவர் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒரு நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
அதாவது முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு மொத்தம் 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அண்மையில்தான் ஒரே ஒருமுறை அமலாக்கத்துறை விசாரணைக்காக ஹேமந்த் சோரன் ஆஜரானார்.
பின்னர் டெல்லி சென்ற ஹேமந்த் சோரனை விசாரிக்க அமலாக்கத்துறை முயற்சித்தது. ஆனால் டெல்லி பங்களாவில் ஹேமந்த் சோரன் இல்லை என தெரியவந்தது. ஹேமந்த் சோரனுக்காக பல மணிநேரம் காத்திருந்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்தது அமலாக்கத்துறை.
ஆனால் ஹேமந்த் சோரன் ராஞ்சிக்கு காரிலேயே வந்துவிட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ராஞ்சியில் ஹேமந்த் சோரன் இல்லத்தில் சுமார் 7 மணிநேரம் இந்த விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை முடிவில் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9