Bilkis Bano case: பில்கிஸ் பானு வழக்கு! குற்றவாளிகள் விடுதலை ரத்து! குஜராத் அரசுக்கு பின்னடைவு!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bilkis Bano Case: பில்கிஸ் பானு வழக்கு! குற்றவாளிகள் விடுதலை ரத்து! குஜராத் அரசுக்கு பின்னடைவு!

Bilkis Bano case: பில்கிஸ் பானு வழக்கு! குற்றவாளிகள் விடுதலை ரத்து! குஜராத் அரசுக்கு பின்னடைவு!

Kathiravan V HT Tamil
Jan 08, 2024 11:08 AM IST

”Bilkis Bano case: இதில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளையும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி குஜராத் அரசு விடுதலை செய்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பி இருந்தது”

தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளையும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி குஜராத் அரசு விடுதலை செய்த நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளையும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி குஜராத் அரசு விடுதலை செய்த நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. (HT_PRINT)

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கோத்ரா வகுப்புவாத கலவரத்தின் போது 21 வயதாகி இருந்த பில்கிஸ் பானு என்பவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன் அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு நீதிமன்றம் அளித்த தண்டனை முன் கூட்டியே ரத்து செய்யப்பட்டது. குஜராத் அரசின் இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு,  குஜாராத் அரசின் இந்த முடிவு பொருத்தமானது அல்ல என கூறி உள்ளது.  

இதில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளையும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி குஜராத் அரசு விடுதலை செய்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பி இருந்தது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.