Case Against Senthil Balaji: இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரலாம்! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது முதலமைச்சர் பரிந்துரை இல்லாமல், ஆளுநர் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சாரத்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இருப்பினும் அவர் தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா இல்லாத அமைச்சராக இருப்பார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், "செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடை இல்லை என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது" என உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் ஆராய்ந்து எடுக்கப்பட்ட தீர்ப்புடன் உடன்படுவதாகவும், சட்டப்பிரவு 136இன் படி எந்த தலையீடும் கோரப்படவில்லை என தெரிவித்து. முதலமைச்சரின் பரிந்துரை இன்றி ஆளுநர் ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும் தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவரை பதிவி நீக்கம் செய்யவும் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்