தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Sbi Hikes Interest Rates For Home Loan Emi

SBI interest rates hike: கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது எஸ்பிஐ!

Karthikeyan S HT Tamil
Aug 15, 2022 07:03 PM IST

எஸ்பிஐ வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இன்று முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது எஸ்பிஐ.
அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது எஸ்பிஐ.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), எம்சிஎல்ஆர் (MCLR) அடிப்படையிலான அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் வாங்கியவர்கள் செலுத்தி வரும் மாத தவணை தொகையும் அதிகரிக்கக்கூடும்.

மூன்று மாதங்களுக்கான வட்டி விகிதம் 7.35 சதவீதமாகவும், 6 மாதங்களுக்கான வட்டி விகிதம் 7.65 சதவீதமாகவும், ஓராண்டுக்கான வட்டி விகிதம் 7.70 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. அதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 7.90 சதவீதமாகவும், மூன்று ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வட்டி விகித உயர்வால் எஸ்பிஐ வங்கியில் கடன் பெற்றவர்களுக்கான மாத தவணை அதிகரிக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்