தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Sandwich Sold For 17,000 Rupees In New York

Sandwich: ரொம்ப ஓவரா இல்ல.. ஒரு சாண்ட்விச் விலை இவ்வளவா..

Aarthi V HT Tamil
Apr 13, 2023 08:00 PM IST

நியூயார்க்கில் ஒரு சாண்ட்விச் சுமார் ரூ. 17,500 விலையில் விற்பனையாகிறது.

சாண்ட்விச் விலை
சாண்ட்விச் விலை

ட்ரெண்டிங் செய்திகள்

விரைவான ஸ்னாக்ஸை அல்லது பசியைத் தணிக்க விரும்பினால் சாண்ட்விச் ஒரு நல்ல ஸ்னாக்ஸாகும். பொதுவாக, சாண்ட்விச்கள் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். ஆனால் நியூயார்க் உணவகத்தில் சாண்ட்விச் $214 (ரூ. 17,500) விலையில் விற்பனையாகிறது.

செரண்டிபிட்டி என்ற உணவகம் சாண்ட்விச்சை அதிக விலைக்கு விற்பனை செய்தது என்ற கின்னஸ் சாதனையை 2014 ஆம் ஆண்டு வென்றது.

இந்த சாண்ட்விச் டோம் பெரிக்னான் ஷாம்பெயின் மற்றும் 23 கேரட் உண்ணக்கூடிய தங்க செதில்களால் செய்யப்பட்ட பிரெஞ்ச் புல்மேன் ஷாம்பெயின் ரொட்டியின் தடிமனான துண்டுகளால் தயாரிக்கப்படுகிறது. பின்னர் அது புல் ஊட்டப்பட்ட வெள்ளை ட்ரஃபிள் வெண்ணெய் கொண்டு செய்யப்படுகிறது.

சாண்ட்விச் தெற்கு இத்தாலியில் தயாரிக்கப்படும் அரிதான கேசியோகாவல்லோ பொடோலிகோ சீஸ் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. "இந்த ருசியான ஓவர்-தி-டாப் சாண்ட்விச்சை ஆர்டர் செய்ய 48 மணிநேர முன் அறிவிக்க வேண்டுமாம்.

இது உணவகத்தின் முதல் உலக சாதனை இதுவல்ல. முன்னதாக விலை உயர்ந்த பிரஞ்சு பொரியல், விலை உயர்ந்த மில்க் ஷேக், விலை உயர்ந்த இனிப்பு போன்ற உணவுகளை செய்து சாதனை படைத்து உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel