மருத்துவ உபகரணத் துறையில் முதலீட்டு ஆர்வம் அதிகரிப்பு.. பிரபல நிறுவனங்களுடன் ரிலிசிஸ் மெடிக்கல் டிவைசஸ் பேச்சுவார்த்தை
இந்தியாவின் மருத்துவ உபகரணத் துறையில் முதலீட்டு ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், ரிலிசிஸ் மெடிக்கல் டிவைசஸ் நிறுவனத்தில் KKR மற்றும் TPG நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

ரிலிசிஸ் மெடிக்கல் டிவைசஸ் நிறுவனம், ரூ.1,200–1,300 கோடி முதலீட்டிற்காக உலகளாவிய தனியார் ஈக்விட்டி நிறுவனங்களான KKR மற்றும் TPG உடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனையானது, தற்போதைய முதலீட்டாளரான Siguler Guff-க்கு முழு அல்லது பகுதி வெளியேறும் வாய்ப்பை வழங்கும் என்று மிண்ட் இதழுக்குத் தெரிவித்த இரண்டு நபர்கள் கூறினர்.
“TPG தனது போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்த நிறுவனத்தை மதிப்பீடு செய்து வருகிறது. KKR கடந்த ஆண்டு Apax Funds-இடமிருந்து Healthium Medtech-ஐ கையகப்படுத்தியதன் மூலம் உருவாக்கப்பட்ட தனது மருத்துவ தொழில்நுட்ப தளத்தை விரிவுபடுத்த மருத்துவ உபகரண உற்பத்தியாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்று மேற்கண்ட நபர்களில் ஒருவர் கூறினார். TPG-யும் தனக்கென ஒரு மருத்துவ தொழில்நுட்ப தளத்தை உருவாக்க முயற்சி செய்யலாம் என்று அந்த நபர் மேலும் கூறினார்.