தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Reliance Retail Launched Fashion & Lifestyle Departmental Store Format Named As Reliance Centro

Reliance centro: சென்ட்ரோ என்ற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனம் ஆடையகம் திறப்பு!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 29, 2022 11:22 PM IST

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆடைகள் விற்பனைக்காகவே ரிலையன்ஸ் சென்ட்ரோ என்ற ஷோரூம்மை ரிலையன்ஸ் நிறுவனம் திறந்துள்ளது.

பேஷன் பிரியர்களை கவரும் விதமாக ரிலையன்ஸ் சென்ட்ரோ என்ற ஆடையகத்தை திறந்துள்ள ரிலையன்ஸ்
பேஷன் பிரியர்களை கவரும் விதமாக ரிலையன்ஸ் சென்ட்ரோ என்ற ஆடையகத்தை திறந்துள்ள ரிலையன்ஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்களுக்கான டிபார்ட்மென்டல் ஸ்டோராக ரிலையன்ஸ் சென்ட்ரோ தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிராண்டின் முதல் ஷோரூம் தில்லியிலுள்ள வசந்த் குஞ்ச் என்ற பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் சென்ட்ரோ மூலம் பேஷன் துறையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவே இது அமைந்துள்ளது. இதில் ஆடை, காலணி, காஸ்மெட்டிக்ஸ், உள்ளாடைகள் என அனைத்து உயர்தர வகையான பொருட்களும் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லியில் திறக்கப்பட்டுள்ள முதல் கடையில், அறிமுக தள்ளுபடியாக ரூ.4,000க்கு பொருள்களை வாங்கினால் ரூ.1,500 தள்ளுபடியும், ரூ.5,000க்கு வாங்கினால் ரூ.2,000 தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் பண்டிகை காலத்தில் இது ஒரு சிறந்த தள்ளுபடியாக அமைந்துள்ளது.

WhatsApp channel