‘டெல்லியின் புதிய முதல்வர்.. யார் இந்த ரேகா குப்தா?’ கெஜ்ரிவால் மற்றும் ஆதிஷி உடன் அவருக்கு இருக்கும் ஒற்றுமை!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ‘டெல்லியின் புதிய முதல்வர்.. யார் இந்த ரேகா குப்தா?’ கெஜ்ரிவால் மற்றும் ஆதிஷி உடன் அவருக்கு இருக்கும் ஒற்றுமை!

‘டெல்லியின் புதிய முதல்வர்.. யார் இந்த ரேகா குப்தா?’ கெஜ்ரிவால் மற்றும் ஆதிஷி உடன் அவருக்கு இருக்கும் ஒற்றுமை!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Feb 19, 2025 09:17 PM IST

Rekha Gupta : டெல்லியில் பாஜக சார்பில் ரேகா குப்தாவை முதலமைச்சராக நியமித்துள்ளது நியமித்துள்ளது அக்கட்சி. டெல்லியின் நான்காவது பெண் முதலமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியின் புதிய முதல்வர்.. யார் இந்த ரேகா குப்தா? கெஜ்ரிவால் மற்றும் ஆதிஷி உடன் அவருக்கு இருக்கும் ஒற்றுமை!
டெல்லியின் புதிய முதல்வர்.. யார் இந்த ரேகா குப்தா? கெஜ்ரிவால் மற்றும் ஆதிஷி உடன் அவருக்கு இருக்கும் ஒற்றுமை!

ரேகா குப்தா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே இரண்டு ஒற்றுமைகள் அதிகம் பேசப்படுகின்றன. அரவிந்த் கெஜ்ரிவாலின் பிறப்பிடம் ஹரியானா என்பது போலவே, ரேகா குப்தாவும் ஹரியானாவில் பிறந்தவர். ஹரியானாவின் ஜீந்தில் அவர் பிறந்தார். அவரது தந்தை அரசு வேலையில் இருந்தார். தந்தை வேலை காரணமாக டெல்லிக்கு மாற்றப்பட்டதன் மூலம் அவரது குடும்பம் அங்கு குடியேறியது. அரவிந்த் கெஜ்ரிவால் ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்தவர்.

ரேகா குப்தா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் வைசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மற்றொரு ஒற்றுமை. அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி தன்னை 'வணிகரின் மகன்' என்று மேடைகளில் அறிமுகப்படுத்திக் கொள்வார். இப்போது பாஜக 'வணிகரின் மகள்' டெல்லியை நிர்வகிக்க வாய்ப்பு அளித்துள்ளது.

ஆதிஷியுடனான ஒற்றுமை

டெல்லியில் 'ஆம் ஆத்மி' கட்சியின் ஆதிஷிக்கு பதிலாக ரேகா குப்தா முதலமைச்சர் பதவியில் அமர்கிறார். சுவாரஸ்யமான ஒற்றுமை என்னவென்றால், ஆதிஷி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதே முதலமைச்சரானார். ரேகா குப்தாவும் முதல் முறையாக சட்டமன்றத்தில் இடம் பெறுகிறார். இடம் பெற்ற முதல் முறையே, முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். 

முதல்வர் அறிவிப்புக்கு பின் ரேகா சொன்னவை

ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட்ட பின், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதன் பின் அவர் பேசுகையில், ‘‘ இதற்குப் பிறகு, எனது உயர்மட்ட தலைமை, மரியாதைக்குரிய மோடி ஜி, எங்கள் தேசியத் தலைவர் நட்டா ஜி, மரியாதைக்குரிய சகோதரர் வீரேந்திர சச்தேவா ஜி, எங்கள் பார்வையாளர் மரியாதைக்குரிய ரவிசங்கர் ஜி, தன்கர் ஜி மற்றும் முழு கட்சியின் அனைத்து தொழிலாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இங்கு எனக்கு ஆதரவளித்ததன் மூலம் இந்த பெரிய பொறுப்பை எனக்கு வழங்கிய அனைத்து எம்.எல்.ஏ சகாக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்று ரேகா குப்தா தெரிவித்தார்.

ரேகா குப்தா பதவியேற்பு விபரம் :ரேகா குப்தா டெல்லி முதல்வராக நாளை மதியம் 12:30 மணியளவில் ராம்லீலா மைதானத்தில் பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களும் பதவியேற்பார்கள்.

ரேகா குப்தாவின் தேர்தல்கள்: ரேகா குப்தா ஷாலிமார் பாக் தொகுதியில் இரண்டு முறை தோல்வியடைந்து, மூன்றாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இருப்பினும், முந்தைய இரண்டு தேர்தல்களில், ரேகா குப்தா ஆம் ஆத்மியின் பந்தனா குமாரியிடம் படுதோல்வி அடைந்தார். ரேகா குப்தா மாணவர் அரசியல், ஏபிவிபி மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையவர்.