தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Realme To Launch A New Budget Smartphone Under Rs.10000: Check Out Expected Specs, More

Realme Budget Smartphones: ரூ. 10 ஆயிரத்துக்கும் குறைவான பட்ஜெட் போனை வெளியிடும் ரியல்மி! என்னென்ன ஸ்பெஷல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 02, 2024 05:58 PM IST

ரியல்மி நிறுவனம் ரூ. 10 ஆயிரத்துக்கு குறைவான பட்ஜெட் ஸ்மார்ட் போன் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அத்துடன் அந்த நிறுவனத்தின் புதிய வெளியீடான ரியல்மி சி65 விவரக்குறிப்புகளை பார்க்கலாம்.

விரைவில் வெளியாக இருக்கும் ரியல்மி சி53 போன்கள்
விரைவில் வெளியாக இருக்கும் ரியல்மி சி53 போன்கள் (Amazon)

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையே இந்த புதிய ஸ்மார்ட்போன் ரியல்மி C65 ஆக இருக்கலாம் என்று தகவல் லீக் ஆகி உள்ளன. இது 6GB RAM உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, பட்ஜெட் ஸ்மார்ட்போன் பல்வேறு அட்டகாசமான தொழிநுட்பங்களுடன்,  வாங்குபவர்களை ஆச்சரியப்படுத்தும் விலைகளும் வெளியாகியுள்ளன.

ரியல்மி பட்ஜெட் ஸ்மார்ட்போன் பற்றி

91மொபைல்ஸ் தளத்தின் கூற்றுப்படி, ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுக விலை ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போன் 6 GB RAM மற்றும் 256 GB வரை ஸ்டோரேஜுடன் வரும் எனவும் தெரிகிறது. இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் பெயர் மற்றும் மாடல் இன்னும் வெளியிடப்படவில்லை.

ரியல்மி நிறுவனம் ரியல்மி 12x 5G என்ற ஸ்மார்டபோனை ஏப்ரல் 3ஆம் தேதி இந்தியாவிலும், ரியல்மி C65ஐ வியட்நாமில் ஏப்ரல் 4ஆம் தேதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ரியல்மி நிறுவன புதிய போனாக வர இருக்கும் ரியல்மி C65 விவரக்குறிப்பு இணையத்தில் லீக்காகியுள்ளது. அதன்படி இந்த புதிய ஸ்மார்ட்போன் என்னென்ன புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. என்பதை பார்க்கலாம்.

ரியல்மி C65 விவரக்குறிப்புகள்

ரியல்மி C65 போன் 90Hz வரை புதுப்பிப்பு வீதம் மற்றும் 625 nits பிரகாசத்துடன் 6.67 இன்ச் IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். நீடித்த செயல்திறனுக்காக, ரியல்மி C65, 5000mAh பேட்டரி மற்றும் 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி C65 ஆனது இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் ஃப்ளிக்கர் சென்சாருடன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு இருக்கலாம். முன்பக்கத்தை பொறுத்தவரை, 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம். பாதுகாப்பிற்காக, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரை வழங்கக்கூடும் மற்றும் சாதனம் ஆண்ட்ராய்டு 14 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடைசியாக, ரியல்மி C65 நீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கான IP54 மதிப்பீட்டைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உலகளாவிய வெளியீட்டு தேதியை ரியல்மி இன்னும் அறிவிக்கவில்லை. 

இந்த ஆண்டில் வெளியாகும் ரியல்மி போன்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் போனாக இந்த ரியல்மி C65 5ஜி இருந்து வருகிறது. அத்துடன் புதிய பட்ஜெட் போன் குறித்த அறிவிப்பும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்