பெங்களுரு கூட்ட நெரிசல்: ஆர்சிபி அணியின் மார்கெட்டிங் தலைவர் உள்பட 4 பேர் கைது! முழு விவரம்
ஜூன் 4 ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீசார் ஆர்சிபியின் மார்க்கெட்டிங் தலைவர் நிகில் சோசலேவை கைது செய்துள்ளனர். அவருடன் கைது செய்யப்பட்ட 4 பேர் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களுரு கூட்ட நெரிசல்: ஆர்சிபி அணியின் மார்கெட்டிங் தலைவர் உள்பட 4 பேர் கைது! முழு விவரம்
ஜூன் 4, புதன்கிழமை எம். சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் மார்கெட்டிங் தலைவர் நிகில் சோசலேவை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ஆர்சிபி மார்கெட்டிங் தலைவர் கைது
ஆர்சிபியின் மார்கெட்டிங் மற்றும் வருவாய் தலைவரான மும்பைக்கு பறக்க முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்சிபி வெற்றி கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்த நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூன்று ஊழியர்களையும் போலீசார் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.