Rameshwaram Cafe Blast: தமிழர்களுக்கு எதிராக அவதூறு கருத்து - மன்னிப்பு கோரிய அமைச்சர்-rameshwaram cafe blast mos karandlaje apologises over cafe blast remark - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rameshwaram Cafe Blast: தமிழர்களுக்கு எதிராக அவதூறு கருத்து - மன்னிப்பு கோரிய அமைச்சர்

Rameshwaram Cafe Blast: தமிழர்களுக்கு எதிராக அவதூறு கருத்து - மன்னிப்பு கோரிய அமைச்சர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 04, 2024 07:00 AM IST

Rameshwaram Cafe Blast: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்த சேர்ந்தவர் காரணம் என கூறிய கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரியுள்ளார்.

Rameshwaram Cafe Blast: தமிழர்களுக்கு எதிராக அவதூறு கருத்து - மன்னிப்பு கோரிய அமைச்சர்
Rameshwaram Cafe Blast: தமிழர்களுக்கு எதிராக அவதூறு கருத்து - மன்னிப்பு கோரிய அமைச்சர்

முன்னதாக, பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது, ​​தமிழக மக்களைப் பற்றி நான் கூறியதாகக் கூறப்படும் கருத்து, தமிழக மக்களின் உணர்வுகளையும், எந்த விதத்திலும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று அவர் கூறினார்.

அமைச்சர் கரந்த்லாஜே மன்னிப்பு

தமிழ்நாட்டின் வரலாறு, செழுமையான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. மேலும் என்னுடைய எந்தவொரு செயலாலும் தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. எனவே, எனது கருத்துகளால் ஏதேனும் காயம் ஏற்பட்டிருந்தால், அதற்காக மீண்டும் ஒருமுறை தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீதியை நிலைநாட்ட இதை தயவுசெய்து பதிவு செய்யலாம், ”என்று கரந்த்லாஜே கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது செப்டம்பர் 5ஆம் தேதி விசாரணை நடைபெறும் எனக் கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.

கடந்த ஆக்ஸ்ட் 7ஆம் தேதி, மத்திய அமைச்சர் கரந்த்லாஜே செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டி, ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரினால், அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துக்காக தொடரப்பட்டது எனவும், போலீஸ் இதில் நடவடிக்கையை தொடர இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அமைச்சர் தரப்பில் கோரப்பட்டது. இந்த மனுவை எதிர்த்து போலீசார் தாக்கல் செய்ய அறிக்கையில், தேசிய புலனாய்வு முகைமையான என்ஐஏ மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சந்தேகத்துக்குரிய நபர்கள் பற்றி என்ஐஏ தரப்பில் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ஆனால் அமைச்சர் இந்த விவகாரத்தில் பகிரங்கமாக அறிக்கை மற்றும் விடியோவை வெளியிட்டார்.

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு

பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடித்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விவகாரத்தில் குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் உள்பட வழக்கில் தொடர்புடைய இருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்திருந்தது.

என்ஐஏ அறிக்கை

இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 12இல் என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில், "பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்த நபர் மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபர் என சந்தேகிக்கப்படும் இருவர், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே கைது செய்யப்பட்டனர்.

குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் அகமது தாஹா (30), உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போலியான அடையாளத்துடன் மறைவான இடத்தில் தங்கி இருந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புகள், மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநில காவல் துறை ஆகியோரின் துணையோடும், ஒத்துழைப்போடும் இவர்களை கைது செய்யும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.