Ram Temple Inauguration: ராமர் கோயிலுக்கு நன்கொடை வாரி வழங்கிய காஷ்மீரி, ஆப்கான் முஸ்லீம்கள் - எவ்வளவு தெரியுமா?
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியா முழுவதுமிருந்து ராமர் கோயிலுக்கு ஏராளமான நன்கொடை, பரிசு தொகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
அயோத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நெருங்கி வரும் நிலையில், பக்தர்களிடமிருந்து பலவிதமான பரிசுகளும், நன்கொடைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து, உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த மக்களும் தங்கள் பக்தியை வெளிப்படுத்தும் விதமாக கோயிலுக்கு பல்வேறு பொருள்களை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
இதையடுத்து விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) தலைவர் அலோக் குமார், "ஆப்கானிஸ்தான், காஷ்மீர், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட பரிசு பொருட்களை ஸ்ரீ ராமர் கோயிலில் நடைபெற இருக்கும் யாகத்துக்கு ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளார்.
ராமர் கோயிலுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பரிசுகளின் விவரங்கள்
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு 2 கிலோ இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குங்குமப்பூவை காஷ்மீர் முஸ்லீம்கள் வழங்கியுள்ளனர்.
ராஜஸ்தானிலுள்ள மெஹந்திபூர் பாலாஜி மந்திர் நியாஸ், பக்தர்களுக்கு விநியோகிப்பதற்காக அயோத்தியின் ராமர் கோயிலுக்கு 1,51,000 பெட்டி லட்டு பிரசாதம் மற்றும் 7,000 போர்வைகளை பரிசளித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் இருந்து ராமர் கோயிலுக்கு 3,610 கிலோ எடையும், 3.5 அடி அகலமும் கொண்ட 108 அடி நீள ஊதுபத்தி வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தின் வதோதராவில் விஹா பார்வாட் என்ற பக்தரால் இந்த ஊதுபத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பத்தியை தயார் செய்ய சுமார் ஆறு மாதங்கள் காலங்கள் ஆனதாக கூறப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் இருந்து ராமர் கோயிலுக்கு 2,100 கிலோ எடையுள்ள அஷ்டதது (எட்டு உலோகங்களின் கலப்புலோகம்) செய்யப்பட்ட மணி கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள எட்டாவின் ஜலேசரில் இந்த மணி தயாரிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து பட்டு உற்பத்தியாளர்கள் ஸ்ரீராமர் கோயில் சித்தரிக்கும் பட்டு பெட்ஷீட்டை அனுப்பியுள்ளனர்.
மற்ற நாடுகளில் இருந்து ராமர் கோயிலுக்கு கிடைத்த பரிசு பொருள்கள்
ஆப்கானிஸ்தானில் இருக்கும் காபுல் ஆற்றின் தண்ணீர் ராமர் கோயிலுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
ராமரின் மனைவி சீதாவின் பிறப்பிடம் என்று நம்பப்படும் நேபாளத்தில் உள்ள ஜனக்பூரில் இருந்து வெள்ளி காலணிகள், ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட பரிசுகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் உள்ள ராம் ஜன்மபூமி கோயிலுக்கு 400 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூட்டு மற்றும் 1265 கிலோ லட்டு பிரசாதத்தை பக்தர்கள் வழங்கியுள்ளனர்.
ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்ரீராம் கேட்டரிங் சர்வீசஸ் நிறுவனம் லட்டு பிரசாதத்தை தயாரித்துள்ளது. இதற்கிடையில், சத்ய பிரகாஷ் சர்மா என்ற வயதான தம்பதியினர் 400 கிலோ எடையுள்ள பூட்டை உருவாக்கி அளித்துள்ளனர்.
குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் ராமர் கோயிலின் கருப்பொருளில் 5,000 அமெரிக்க வைரங்கள் மற்றும் 2 கிலோ வெள்ளியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நெக்லஸை பரிசளித்துள்ளார்.
குறிப்பாக, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்ற நாடுகளிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தோனேசியாவிலும் ராம்லீலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜனவரி 22 ஆம் தேதி வாரணாசியைச் சேர்ந்த லட்சுமி காந்த் தீட்சித் மதியம் 12.20 மணிக்கு ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை நடத்துவார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்