ராம நவமி ஊர்வலம்: குஜராத், மத்தியப்பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் வன்முறை
ராம நவமி வட மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அப்போது குஜராத், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது வகுப்புவாத மோதல்கள் வெடித்தன. இதில் ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். கல்வீச்சு சம்பவங்கள், தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. மோதலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசிக் கலைத்தனர். இந்த வன்முறையில் குஜராத், ஆனந்த் மாவட்டம், கம்பாத் பகுதியில் ஒருவர் பலியானார். குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வேண்டுகோளை விடுத்துள்ளார். மேலும், மக்கள் சகோதரத்துவத்தை பேண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.