Indian Railways: கன்பார்ம் டிக்கெட் இருந்தால் மட்டுமே ரயில்வே ஸ்டேஷினில் அனுமதி - கூட்டத்தை கட்டுப்படுத்த ரயில்வே முடிவு
இந்தியாவில் உள்ள 60 முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே முழுமையான அணுகல் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கன்பார்ம் முன்பதிவு டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகளை மட்டுமே நடைமேடைகளில் அனுமதிக்கும் விதமாக புதிய முடிவை எடுத்துள்ளது.

பண்டிகை கால கூட்ட நெரிசல்கள் மற்றும் மகா கும்பமேளா போன்ற முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் 60 நிலையங்களில் புதிய கூட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது
கூட்ட நெரிசலை நிர்வகிக்க, இந்த நிலையங்களுக்கு வெளியே நிரந்தர காத்திருப்பு பகுதிகள் உருவாக்கப்படும், பயணிகள் தங்கள் ரயில் வரும்போது மட்டுமே நடைமேடைகளில் ஏற அனுமதிக்கப்படும்.
புது டெல்லி, ஆனந்த் விஹார், வாரணாசி, அயோத்தி மற்றும் பாட்னா நிலையங்களில் ஏற்கனவே இதற்கான பைலட் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ரயில்வே இந்த நிலையங்களில் முழுமையான அணுகல் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தும். அதன்படி உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகள் (கன்பார்ம் டிக்கெட்) உள்ள பயணிகளை மட்டுமே நடைமேடைகளில் அனுமதிக்கும். அதே நேரத்தில் அனைத்து அங்கீகரிக்கப்படாத நுழைவுப் புள்ளிகளையும் சீல் வைக்கும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளதுு.
மேலும், 12 மீட்டர் (40 அடி) மற்றும் 6 மீட்டர் (20 அடி) அகலம் கொண்ட புதிய நடைமேம்பாலங்கள் அனைத்து நிலையங்களிலும் நிறுவப்படும். மகா கும்பமேளாவின் போது 'திறமையாக' நிரூபிக்கப்பட்ட இந்த அகலமான ப்ரீ ஆன் போர்டு (FOB) நடைமேடகளில், சிறந்த கூட்ட நடமாட்டத்துக்கான சாய்வுப் பாதைகள் அடங்கும்.
ரயில் நிலையங்கள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான கேமராக்களை நிறுவுவதன் மூலம் கண்காணிப்பை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முக்கிய ரயில் நிலையங்களில் போர் அறைகள் அமைக்கப்படும், அங்கு அனைத்து துறைகளின் அதிகாரிகளும் கூட்ட மேலாண்மை முயற்சிகளை ஒருங்கிணைப்பார்கள்.
ஒவ்வொரு பெரிய ரயில் நிலையத்திலும் ஒரு நிலைய இயக்குநர் இருப்பார், அந்த இடத்திலேயே நிதி முடிவுகளை எடுக்க அதிகாரம் பெற்ற ஒரு மூத்த அதிகாரி இருப்பார். ரயில் நிலைய திறன் மற்றும் ரயில் கிடைக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் டிக்கெட் விற்பனையை ஒழுங்குபடுத்தவும் நிலைய இயக்குநருக்கு அதிகாரம் இருக்கும்.
பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர், மகா கும்பமேளாவிற்குச் சென்ற ஒரு ரயில் உட்பட மூன்று ரயில்கள் தாமதமானதால் ஏற்பட்ட குழப்பத்தால் இது ஏற்பட்டது.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கான சிறப்பு சேவை உட்பட மூன்று ரயில்கள் தாமதமானதைத் தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ஒரே நேரத்தில் சுமார் 1,500 பொது வகை டிக்கெட்டுகள் விற்கப்பட்டதால் நிலைமை மோசமடைந்தது, இதனால் 13 மற்றும் 14 பிளாட்ஃபார்ம்களில் கடுமையான கூட்டம் ஏற்பட்டது.
