தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Modi Vs Rahul Gandi: Entire Political Science மாணவருக்குதான் காந்தி படம் தேவை! மோடியை கிண்டல் அடித்த ராகுல்!

Modi vs Rahul Gandi: Entire Political Science மாணவருக்குதான் காந்தி படம் தேவை! மோடியை கிண்டல் அடித்த ராகுல்!

Kathiravan V HT Tamil
May 29, 2024 09:10 PM IST

Modi vs Rahul Gandi: ’Entire Political Science’ படித்த மாணவருக்கு மட்டுமே காந்தியை பற்றி தெரிந்து கொள்ள திரைப்படம் பார்க்க நேரிடும் என்று பிரதமர் நரேந்திர மோடியை, ராகுல் காந்தி கிண்டல் அடித்து உள்ளார்.

Entire Political Science மாணவருக்குதான் காந்தி படம் தேவை! மோடியை கிண்டல் அடித்த ராகுல்! (Photo by Santosh Kumar/ Hindustan Times)
Entire Political Science மாணவருக்குதான் காந்தி படம் தேவை! மோடியை கிண்டல் அடித்த ராகுல்! (Photo by Santosh Kumar/ Hindustan Times)

ட்ரெண்டிங் செய்திகள்

ராகுல் காந்தி ட்வீட்

1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான "காந்தி" வெளியாகும் வரை மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கூற்று குறித்து  தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், “மகாத்மா காந்தியைப் பற்றி அறிய, Entire Political Science படித்த மாணவர் மட்டுமே படத்தைப் பார்க்க வேண்டும்” என்று மோடியின் முதுகலை பட்டப்படிப்பைப் பற்றி வெளிப்படையாகக் கேலி செய்தார்.

காந்தி குறித்து நரேந்திர மோடியின் பேச்சு

ஏபிபி என்ற தொலைக்காட்சி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், மகாத்மா காந்தியை உலகம் அறியவில்லை என்றும், கடந்த 75 ஆண்டுகளில் காந்திக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைப்பது நாட்டின் பொறுப்பு அல்லவா என்றும்  பிரதமர் நரேந்திர மோடி கூறி இருந்தார். 

"மகாத்மா காந்தி உலகில் ஒரு பெரிய ஆன்மா. இந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியைப் பற்றி உலகிற்கு தெரிவிக்க வேண்டியது நம் பொறுப்பு அல்லவா? அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. என்னை மன்னியுங்கள், ஆனால் முதல் முறையாக அவரைப் பற்றி உலகில் ஆர்வம் ஏற்பட்டது 'காந்தி' என்ற படம் எடுக்கப்பட்டபோது" என்று பிரதமர் பேட்டியின் போது கூறினார்.

“மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை உலகம் அறிந்திருந்தால், காந்தி அவர்களை விட குறைந்தவர் அல்ல, அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு இதைச் சொல்கிறேன்…” என்று மோடி மேலும் கூறினார்.

பிரதமரின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் 

காந்தி குறித்த பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, “மோடிஜி பிரதமராவதற்கு முன்பு, உலகம் முழுவதும் டஜன் கணக்கான நாடுகளில் மகாத்மா காந்தியின் சிலைகள் நிறுவப்பட்டது என கூறினார். 

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், வாரணாசி, டெல்லி, அகமதாபாத் ஆகிய இடங்களில் காந்திய நிறுவனங்களை அழித்தது மோடியின் அரசுதான் என்று குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024:

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.

இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.

வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும், மே 25ஆம் தேதி அன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்ற முடிந்த நிலையில், வரும் ஜூன் 1ஆம் தேதி அன்று 7ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

டி20 உலகக் கோப்பை 2024