ஆபரேஷன் சிந்தூர், போர் நிறுத்தம் குறித்த விவாதம்.. நாடாளுமன்றம் சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும்! ராகுல் காந்தி கடிதம்
பஹல்காம் தாக்குதல், சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் நிறுத்தம் குறித்து மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியம் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் நிறுத்தம் தொடர்பாக உடனடியாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். எதிர்க்கட்சியின் இந்த ஒரு மனதான கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கூறிய பிரச்னைகள் குறித்து, மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியம் என்று ராகுல் காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்
பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, "அன்புள்ள பிரதமரே, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் ஒருமனதான கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.