PUBG ban in Afghanistan: பப்ஜிக்கு நோ சொன்ன தாலிபான் - முக்கிய செய்திகள்
பப்ஜிக்கு தடை, குளோனிங் முறையில் உலகின் முதல் ஓநாய் உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் யாரிடமும் நியாயமான எதிர்ப்பை தான் காணவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நொய்டாவில் குடியிருப்பு வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேருக்கு அக்டோபர் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் மிரட்டலால் மூடப்பட்ட தியேட்டர்கள் தற்போது 32 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
மாணவிகள் மற்றும் சிறுமிகளின் ஆபாச விடியோக்களை டிவிட்டரில் 20 - 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தில்லி மகளிர் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
லண்டனில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தில்லி திரும்பினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கடந்த 12 நாள்களில் 225 கி.மீ. பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஹரியாணா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தில் இருந்த 4,000 நட்டு, போல்டுகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் ஜமால் சாகிப் என்பவர் பைக்கிள் சென்றபோது மர்மநபர் ஒருவருக்கு லிப்ட் கொடுத்ததையடுத்து, மர்மநபர் தான் வைத்திருந்த விஷ ஊசியை செலுத்தியதால் அவர் உயிரிழந்தார்.
குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பப்ஜி, டிக்டாக் போன்ற செயலிகளுக்கு அடுத்த 90 நாட்களில் தடை விதிக்க தாலிபான்கள் முடிவெடுத்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணி நியமன முறைகேடு வழக்கில் இதுவரை ரூ.100 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அயோத்தியில் அமையவுள்ள ராமர் சிலை குஜராத்தில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட 69 மீட்டர் உயரமாக அமையவுள்ளது.
வைரஸ் காற்றில் கலந்திருந்தால் அதை மெசேஜ் மூலம் அணிந்திருப்பவருக்குக் காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முகக்கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் சஹாரன்பூரில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் இன்று 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் இளம் காதல் தம்பதியின் சடலங்கள் மரத்தில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குளோனிங் மூலம் உலகின் முதல் ஓநாயை உருவாக்கி சீனாவை சேர்ந்த சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
கொரோனாவினால் இன்னமும் அமெரிக்காவில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்று நீங்கிவிட்டதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.

டாபிக்ஸ்