New York: அமெரிக்காவில் யூத தம்பதிகள் முன் ‘ஹமாஸ் வாழ்க’ என முழங்கிய பாலஸ்தீனிய ஆதரவாளர்கள்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  New York: அமெரிக்காவில் யூத தம்பதிகள் முன் ‘ஹமாஸ் வாழ்க’ என முழங்கிய பாலஸ்தீனிய ஆதரவாளர்கள்!

New York: அமெரிக்காவில் யூத தம்பதிகள் முன் ‘ஹமாஸ் வாழ்க’ என முழங்கிய பாலஸ்தீனிய ஆதரவாளர்கள்!

Marimuthu M HT Tamil
Dec 22, 2023 11:14 AM IST

இரண்டு பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள், முகத்தை மூடிக்கொண்டு, ஒரு யூத தம்பதிக்கு முன்னால், "ஹமாஸ் வாழ்க" என்று திரும்பத் திரும்ப முழக்கமிட்டதை வீடியோ காட்டுகிறது.

நியூயார்க் பொது நூலகத்தின் முன் நடந்த பேரணியின் போது இரண்டு பாலஸ்தீனிய ஆதரவாளர்கள், யூத தம்பதியரிடம் "வாழ்க ஹமாஸ்" என்று கத்துவதை ஒரு வைரல் வீடியோ காட்டுகிறது. (X screenshot)
நியூயார்க் பொது நூலகத்தின் முன் நடந்த பேரணியின் போது இரண்டு பாலஸ்தீனிய ஆதரவாளர்கள், யூத தம்பதியரிடம் "வாழ்க ஹமாஸ்" என்று கத்துவதை ஒரு வைரல் வீடியோ காட்டுகிறது. (X screenshot)

அமெரிக்காவின் நியூயார்க்கில் பாலஸ்தீன ஆதரவாளர்களும், இஸ்ரேல் ஆதரவாளர்களும் தங்கள் பேரணியை நடத்தினர். இது மிட் டவுன் மன்ஹாட்டனில் நடந்தது. அப்போது, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதே நேரத்தில், எதிர் எதிர்ப்பாளர்கள் குழு இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இரு தரப்பினரும் அடிக்கடி நேருக்கு நேர் வந்து மோதிக் கொண்டனர்.

அப்போது, இரண்டு பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள், முகத்தை மூடிக்கொண்டு, ஒரு யூத தம்பதிக்கு முன்னால்சென்று "ஹமாஸ் வாழ்க" என்று திரும்பத் திரும்பக் கூச்சலிட்டனர். பாலஸ்தீனக் கொடிகளையும் அசைத்தனர். இறுதியில் பாலஸ்தீன ஆதரவாளர்களை, அங்கிருந்து செல்லுமாறு அமெரிக்கப் போலீசார் உத்தரவிட்டனர்.

இஸ்ரேலுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் தெரு ஓரத்தில்,  யூத அரசின் நீலம் மற்றும் வெள்ளைக்கொடியை அசைத்து, “போர்நிறுத்தம் இல்லை, ஹமாஸை ஒழிக்கவும்” என்ற வாசகப் பலகைகளை வைத்திருந்தனர்.

அமெரிக்க மக்களின் ரியாக்‌ஷன்:

வீடியோவின் கருத்துப் பிரிவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் யூத தம்பதியினரைப் பார்த்து சத்தமிட்டதற்கு அமெரிக்க பொதுமக்கள் கண்டனம் செய்தனர். 

“ஹமாஸின் அன்பும் ஆதரவும் வேண்டும் என்றால், ஹமாஸுக்கு அதிகாரம் உள்ள நாட்டிற்கு அவர்கள் செல்ல வேண்டும். ஹமாஸ் ஆட்சி செய்வதை இந்த நாடு விரும்பவில்லை. எனவே அதை எங்கள் மீது தள்ளுவதை நிறுத்துங்கள்” என்று  அமெரிக்கப் பயனர் தனது எக்ஸ் தளத்தில் எழுதினார். 

‘’ இந்த யூத குடிமக்கள் உங்கள் நகரத்தில் பாதுகாப்பாக இருப்பதாக நான் நினைக்கவில்லை," என்று மற்றொரு அமெரிக்கப் பயனர் கூறினார்.

மற்றொரு அமெரிக்கர், "இவர்கள் அமைதியான எதிர்ப்பாளர்கள் அல்ல. அவர்கள் வன்முறை கலவரக்காரர்கள். அந்த போலீஸ்காரர்கள் இல்லை என்றால் கற்பனை செய்து பாருங்கள். இந்த மக்கள் உண்மையிலேயே பயங்கரமானவர்கள்" என்று எழுதியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.