Tamil News  /  Nation And-world  /  Prime Minister Narendra Modi's Final Speech At The Old Parliament Building

Old Parliament: ‘இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது' பழைய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இறுதி உரை!

Kathiravan V HT Tamil
Sep 19, 2023 01:34 PM IST

”பழைய நாடாளுமன்றம் சம்விதன் சதன் என்று அழைக்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள்”

பழைய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி
பழைய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இறுதிக் கூட்டத்தில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரைக் குறிப்பிட்டு, வரலாறு படைத்த பழைய பார்லிமென்ட் கட்டடத்திற்கு புதிய பெயரை சூட்ட பிரதமர் மோடி பரிந்துரை செய்தார்.

"எனக்கு ஒரு ஆலோசனை உள்ளது, இப்போது, ​​நாம் புதிய பாராளுமன்றத்திற்குச் செல்லும்போது, அதன் (பழைய பாராளுமன்ற கட்டிடத்தின்) கௌரவம் ஒருபோதும் குறையக்கூடாது. இதை பழைய பாராளுமன்ற கட்டிடமாக விட்டுவிடக்கூடாது. எனவே, நீங்கள் ஒப்புக்கொண்டால், இது 'சம்விதன் சதன்' என அறியப்பட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

“எதிர்காலத்திற்கான சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அரசியல் பலன்களைப் பற்றி மட்டும் சிந்திப்பதில் நாம் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, நமது இளைஞர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் ஈர்க்கப்படுகிறார்கள். இந்த வாய்ப்பை நாம் தவறவிடக் கூடாது” என்று பிரதமர் மோடி கூறினார்.

"இன்று, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய எதிர்காலத்தின் தொடக்கத்தை நாங்கள் பெறப் போகிறோம். இன்று, வளர்ந்த இந்தியாவின் உறுதியை நிறைவேற்றும் உறுதியுடன் புதிய கட்டிடத்திற்குச் செல்கிறோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா ஒரு புதிய ஆற்றலால் நிரம்பியுள்ளது என்றும், இதன் மூலம் கோடிக்கணக்கான மக்களின் கனவுகளை நிஜமாக்க முடியும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

முஸ்லீம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு இந்த பாராளுமன்றத்தின் மூலம் நீதி கிடைத்தது, 'முத்தலாக்கை' எதிர்க்கும் சட்டம் இங்கிருந்து ஒற்றுமையாக நிறைவேற்றப்பட்டது. 

கடந்த சில ஆண்டுகளில், திருநங்கைகளுக்கு நீதி வழங்கும் சட்டத்தையும் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டங்களை நாங்கள் ஒற்றுமையாக நிறைவேற்றியுள்ளோம். நாடாளுமன்றத்தில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் வாய்ப்பை பெற்றது எங்களின் பாக்கியம் என பிரதமர் மோடி பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்