PM Modi Speech : ‘ஏழைகளின் குடிசையில் போட்டோ ஷூட் எடுத்து மகிழ்பவர்கள்’ ராகுலை கிண்டலடித்த மோடி!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi Speech : ‘ஏழைகளின் குடிசையில் போட்டோ ஷூட் எடுத்து மகிழ்பவர்கள்’ ராகுலை கிண்டலடித்த மோடி!

PM Modi Speech : ‘ஏழைகளின் குடிசையில் போட்டோ ஷூட் எடுத்து மகிழ்பவர்கள்’ ராகுலை கிண்டலடித்த மோடி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Feb 04, 2025 06:02 PM IST

‘ராகுல் காந்தியை நையாண்டி செய்த பிரதமர் மோடி, ஏழைகளின் குடிசைகளில் போட்டோஷூட் எடுத்து மகிழ்பவர்களுக்கு, ஏழைகளின் பேச்சு சலிப்பாகத்தான் இருக்கும்,’ என்று பேசினார்.

PM Modi Speech : ‘ஏழைகளின் குடிசையில் போட்டோ ஷூட் எடுத்து மகிழ்பவர்கள்’ ராகுலை கிண்டலடித்த மோடி!
PM Modi Speech : ‘ஏழைகளின் குடிசையில் போட்டோ ஷூட் எடுத்து மகிழ்பவர்கள்’ ராகுலை கிண்டலடித்த மோடி!

ராகுல் காந்தியை கிண்டல் செய்த பிரதமர்

பிரதமர் மோடி பேசும் குறிப்பிட்டதாவது: ‘ஐந்து ஐந்து தசாப்தங்களாக பொய்யான கோஷங்கள் கொடுக்கப்பட்டன. நடுத்தர வர்க்கத்தின் கனவுகள் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ளப்படுவதில்லை. இதைப் புரிந்து கொள்ள உணர்வு வேண்டும். சிலருக்கு அது இல்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் கூற வேண்டியுள்ளது. ராகுல் காந்தியை நையாண்டி செய்த அவர், ஏழைகளின் குடிசைகளில் போட்டோஷூட் எடுத்து மகிழ்பவர்களுக்கு, ஏழைகளின் பேச்சு சலிப்பாகத்தான் இருக்கும்,’ என்று கூறினார்.

ராஜூவ் காந்தியை கிண்டல் செய்து பேசிய மோடி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் நையாண்டி செய்த பிரதமர், நம் நாட்டில் ஒரு பிரதமர் இருந்தார், அவரை மிஸ்டர் கிளீன் என்று சொல்வது ஃபேஷனாக இருந்தது. அவர் ஒரு பிரச்சனையை அடையாளம் கண்டு, டெல்லியில் இருந்து ஒரு ரூபாய் கிளம்பினால், கிராமத்தில் போய் சேர சேர அது 15 பைசாவாகிவிடும் என்று கூறினார். அப்போது பாராளுமன்றத்தில் ஒரே கட்சியின் ஆட்சிதான் இருந்தது. ஆனால் அவர் அற்புதமான கை சாமர்த்தியத்தை கற்றுக் கொண்டிருந்தார். நாடு நமக்கு வாய்ப்பு கொடுத்தபோது, நாம் தீர்வுகளைத் தேட முயற்சித்தோம். இன்று நம்முடைய மாதிரி, சேமிப்பும் வளர்ச்சியும் கொண்டது என்று பிரதமர் மோடி கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் பிரதமர் மோடி குறிவைத்து, நாம் லட்சக்கணக்கான கோடி ரூபாய் சேமித்தோம், ஆனால் அதை ‘சீஷ்மஹால்’ கட்டுவதற்கு அல்ல, நாட்டைக் கட்டுவதற்கு பயன்படுத்தினோம் என்று கூறினார். ஜனங்களின் பணம், ஜனங்களுக்காக செலவிடப்பட்டது. நாம் ஜன்தன், ஆதார், டிபிடி மூலம் 40 கோடி ரூபாயை நேரடியாக மக்களின் கணக்கில் செலுத்தினோம், என்று பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடியின் பேச்சை மேஜையை தட்டி, பாஜகவினர் வரவேற்றனர். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.