PM Modi Resigns: ’பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி!’ அமைச்சரவையை கலைக்க ஜனாதிபதியிடம் கடிதம் அளித்தார்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 17ஆவது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார்

PM Modi Resigns: ’பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி!’ அமைச்சரவையை கலைக்க ஜனாதிபதியிடம் கடிதம் அளித்தார்! (PTI )
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்து உள்ளார். இது குறித்த கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மோடி அளித்துள்ளார். அதில் 17ஆவது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை தீர்மானத்தையும் அளித்துள்ளார்.
இந்த சந்திப்பில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
யாருக்கும் பெரும்பான்மை இல்லை?
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்தது. நேற்றைய (ஜூன் 04) தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைகாத சூழல் உருவாகி உள்ளது.