5 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்.. உத்தரவு பிறப்பித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  5 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்.. உத்தரவு பிறப்பித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

5 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்.. உத்தரவு பிறப்பித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

Malavica Natarajan HT Tamil
Dec 24, 2024 10:06 PM IST

கேரளா, ஒடிசா. பிகார், மணிப்பூர், மிசோரம் மாநில ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

5 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்.. உத்தரவு பிறப்பித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
5 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்.. உத்தரவு பிறப்பித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

அதன்படி, கேரள மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக பிகார் மாநில ஆளுநராக பதவி வகித்தார்.

பிகார் மாநில ஆளுநராக ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கேரளா மாநில ஆளுநராக இருந்தவர்.

மிசோரம் மாநில ஆளுநராக முன்னாள் ராணுவ தளபதி விஜய் குமார் சிங் (வி.கே.சிங் - ஓய்வு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மணிப்பூர் மாநில ஆளுநராக அஜய் குமார் பல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து அம்மாநில ஆளுநராக டாக்டர் ஹரிபாபு கம்பம்படி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக மிசோரம் மாநில ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.