Fact Check: அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பாஜக தேசிய தலைமைச் செய்தித்தொடர்பாளரா?-உண்மை என்ன?
Prashant Kishor: பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமைச் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் செய்தி வலைத்தள குழு தேடியது. உண்மை என்ன என்பதை பாருங்கள்.
கூற்று: பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகின. இத்தகவல் உண்மையா என பார்ப்போம்.
உண்மை: இத்தகவல் தவறானது என்று பிரசாந்த் கிஷோர் தரப்பும், பாஜக தரப்பும் தெளிவுப்படுத்தியுள்ளது.
பாஜகவின் தேசியத் தலைமைச் செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அதன் உண்மைத்தன்மையை நியூஸ்செக்கர் செய்திக்குழு சரிபார்த்தது.
உண்மை சரிபார்ப்பு
பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமைச் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் செய்தி வலைத்தள குழு தேடியது.
இத்தேடலில் செய்தி வெளியீடு பகுதியில் இதுக்குறித்த எந்த செய்தியும் காணப்படவில்லை என அச்செய்தித்தளம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாஜக செய்தித்தொடர்பாளர்கள் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்த அக்குழு, அனில் பலூனி என்பவர் பாஜகவின் தேசியத் தலைமைச் செய்தி தொடர்பாளராக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தது.
இதனையடுத்து பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங்கை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு வைரலாகும் அறிக்கை குறித்து நியூஸ்செக்கர் செய்தியாளர்கள் குழு விசாரித்தது. அவர் வைரலாகும் இந்த அறிக்கை போலியானது என்று உறுதிப்படுத்தியதை அடுத்து, இத்தகவல் போலியானது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவும் இந்த தகவல் பொய்யானது என்று நியூஸ்செக்கர் செய்திக்குழுவுக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து தேடுகையில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் இந்த அறிக்கை போலியானது என்றும், இந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சி பரப்புவதாக குற்றம் சாட்டியும் பதிவு ஒன்று பதிவிட்டிருப்பதை அந்தக் குழு கண்டறிந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் பாஜகவின் தேசியத் தலைமைச் செய்தி தொடர்பாளராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் அறிக்கை போலியானது என்பது தெளிவாகியிருக்கிறது.
முடிவு
பிரசாந்த் கிஷோர் பாஜகவின் தேசியத் தலைமை செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும். இந்த தகவலை பாஜக தரப்பும் பிரசாந்த் கிஷோர் தரப்பும் உறுதி செய்துள்ளது.
யார் இந்த பிரசாந்த் கிஷோர்?
பிரசாந்த் கிஷோர் பாண்டே, பேச்சு வழக்கில் பிகே என்று அழைக்கப்படுபவர், ஒரு இந்திய அரசியல் ஆலோசகர் ஆவார். அவர் இந்திய அரசியலில் நுழைவதற்கு முன் எட்டு ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் சபையின் நிதியுதவியுடன் பொது சுகாதாரத் திட்டங்களில் பணியாற்றினார்.
கிஷோர் பிஜேபியின் அறிவைப் பெறுவதற்காக அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினார், பின்னர் அவர் பிஜேபி, ஜேடி(யு), ஐஎன்சி, ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆர்சிபி, திமுக மற்றும் டிஎம்சி ஆகியவற்றில் பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில் மூன்றாவது முறையாகவும், குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு, மூன்றாவது முறையாக முதல்வர் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உதவுவதற்காக 2011 இல் அவரது முதல் பெரிய அரசியல் பிரச்சாரத் திட்டம் இருந்தது. இருப்பினும், 2014 லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (BJP) அறுதிப்பெரும்பான்மையைப் பெறுவதற்கு அவர் கருத்திற்கொண்ட தேர்தல்-பிரசாரக் குழுவான சிட்டிசன்ஸ் ஃபார் அக்கவுண்டபிள் கவர்னன்ஸ் (CAG) மூலம் அவர் பிரபலமானார்.
பொறுப்புத் துறப்பு
இந்தச் செய்தி முதலில் Newschecker இணையதளத்தில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.
டாபிக்ஸ்