தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Political Surprise Comrade Joti Basu Memorial Day

Joti Basu: அரசியல் ஆச்சரியம் தோழர் ஜோதிபாசு!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 17, 2024 06:20 AM IST

ஜோதிபாசுவின் விருப்பப்படி அவரது உடல் மருத்துவதுறைக்கு தானமாக வழங்கப்பட்டது. குறிப்பாக அவரது மூளையை பெங்களூரில் உள்ள NIMHANS மருத்துவமனை தனது ஆராய்ச்சிக்காக கேட்டு பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அரசியல் ஆச்சரியம் தோழர் ஜோதிபாசு
அரசியல் ஆச்சரியம் தோழர் ஜோதிபாசு

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பு

ஜோதிபாசு 1914ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள வங்காள குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை நிசிகாந்த பாசு. தாய் ஏமலதா பாசு. இவரது தந்தை பரோடி என்ற ஊரில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

கல்வி

ஜோதிபாசு 1920ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள தர்மதாலாவில் உள்ள லோரேட்டோ பள்ளியில் தனது கல்வியை தொடங்கினார். பின்னர் 1925ல் தூய சேவியர் பள்ளிக்கு மாறினார். பின்னர் இந்து கல்லூரியில் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

1935ல் தனது சட்ட படிப்பிற்காக இங்கிலாந்திற்கு பயணப்பட்டார். அங்குதான் அவருக்கு அரசியல் ஆர்வம் மேலோங்கியது. 1940ல் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் மூத்த வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். அந்த ஆண்டே இந்தியா திரும்பினார்.

பின் 1944ம் ஆண்டு முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டார். இதையடுத்து தொழிற்சங்க பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946ல் வங்காள சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து 1964ம் ஆண்டு இந்திய பொதுவுடைமை கட்சி பிளவு பட்டபோது புதிதாக தொடங்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் முதல் 9 உறுப்பினர்களில் ஒருவராக விளங்கினார். இதையடுத்து 1967 முதல் 69 வரை ஐக்கிய முன்னணி அரசியல் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.

இதையடுத்து மேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை பெற்றார். 21 ஜூன் 1977 முதல் 6 நவம்பர் 2000 வரை 23 ஆண்டுகள் தொடர்ந்து இடது முன்னணி அரசின் முதலமைச்சராக பணியாற்றினார். 1996 அரசியல் சூழல் காரணமாக ஐக்கிய முன்னணி அரசின் தலைமை அமைச்சராக பொறுப்பேற்க கூட்டணிக்கட்சிகள் துணை நின்றன. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவின் விருப்பத்திற்கு இணங்கி பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார். இது தன் வரலாற்று பிழை என பின்னாளில் ஜோதி பாசு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு தனது உடல் நிலை காரணமாக பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து புத்ததேவ் பட்டாச்சார்யா முதல்வராக பொறுப்பேற்றார்.

2010 ஆண்டு துவக்கத்தில்  உடல் நலக்குறைவால் கொல்கத்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து 17 ஜனவரி 2010ம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜோதிபாசுவின் விருப்பப்படி அவரது உடல் மருத்துவதுறைக்கு தானமாக வழங்கப்பட்டது. குறிப்பாக அவரது மூளையை பெங்களூரில் உள்ள NIMHANS மருத்துவமனை தனது ஆராய்ச்சிக்காக கேட்டு பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஜோதிபாசுவின் நினைவு நாளான இன்று அவர் குறித்த முக்கிய தகவல்களை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பகிர்ந்து கொள்கிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்