YSRTP Chief Sharmila Reddy:ஷர்மிளா ரெட்டியை கிரேன் வைத்து இழுத்து சென்ற போலீசார்
ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி தலைவர் ஷர்மிளாவை காரில் அமர்ந்த படியே போலீசார் கிரேன் மூலம் ஆபத்தான முறையில் இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா ரெட்டி. இவர் தெலங்கானாவில் ஒய் எஸ் ஆர் தெலுங்கானா கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் பிஆர்எஸ் கட்சிக்கு எதிராக பல்வேறு நகர்வுகளை ஷர்மிளாவின் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஷர்மிளா பாதயாத்திரை மேற்கொண்டார்.
இந்நிலையில் தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டம் நர்சம்பேட்டை பகுதியில் நேற்று பேரணி நடத்திய ஷர்மிளா, பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏ பெட்டி சுதர்சன் ரெட்டியை விமர்சித்துள்ளார். அப்போது அங்கிருந்த பிஆர்எஸ் கட்சியினர் ஷர்மிளாவின் வாகனத்தின்மீது தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதன்பின்னர் இருகட்சி ஆதரவாளர்களுக்கும், இடையே இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இன்று ஆளும் சந்திரசேகர ராவுக்கு எதிராக ஷர்மிளா ரெட்டி போராட்டம் நடத்தினார். அப்போது ஷர்மிளா ரெட்டி வந்த காரை தெலங்கானா போலீசார் கிரேன் மூலம் இழுத்து சென்றுள்ளனர்.
காருக்குள் இருந்த ஷர்மிளா ரெட்டியை வெளியேற்றாமல் ஆபத்தான முறையில் அவரை காருக்குள் வைத்து இழுத்து சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஷர்மிளா ரெட்டியின் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.