'உரண்டு இழுத்த சீனா': ஆஸ்திரேலிய கடல் எல்லையில் சீனா துப்பாக்கிச்சூடு பயிற்சி: அதிர்ந்த விமானிகள்
ஆஸ்திரேலிய கடல் எல்லையில் சீனா துப்பாக்கிச்சூடு பயிற்சி செய்ததால், ஆஸ்திரேலிய விமானிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை (ஆர்ஏஏஎஃப் - Royal Australian Air Force), கடந்த மாதம் ஆஸ்திரேலியாவைச் சுற்றி வந்த சீன கடற்படை போர்க்கப்பலைக் கண்காணித்ததை பொதுவெளியில் பகிர்ந்துள்ளது.
இதுதொடர்பாக சீன கடற்படை போர்க்கப்பல் நேரடி தாக்குதல் நடத்தும் என்று, பொதுமக்கள் வானொலியிலும் தகவல் வெளியானதாக, ஆஸ்திரேலிய பாதுகாப்பு விமானிகள் எச்சரித்தனர்.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ கடற்படை போர்க்கப்பல், பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான டாஸ்மான் கடலில் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சியை நடத்தியது. இதனால் 49 ஆஸ்திரேலிய வணிக விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
சர்வதேச சட்டத்தின்கீழ், இந்தப் பயிற்சி குறித்து போதுமான எச்சரிக்கையை வழங்கியதாக சீனா கூறியுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அதிகாரிகள் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியாகவில்லை எனக் கூறியிருக்கின்றனர்.
சீனாவின் நேரடி துப்பாக்கிச்சூடு பயிற்சி: அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியா:
121.5 மெகா ஹெர்ட்ஸ் அவசர வானொலி சேனலில், ஒரு இளம் ஆஸ்திரேலிய விமானி சீன கடற்படை ஒலிபரப்பை செய்ததைக் கேட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள் இந்த நேரடி துப்பாக்கிச்சூடு பயிற்சியைப் பற்றி முதலில் அறிந்து அதிர்ச்சியடைந்தன.
வரும் மே மாதத்தில் வரவிருக்கும் ஆஸ்திரேலிய நாட்டின் தேசிய தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சியான லிபரல் கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், "நமது தேசிய கடல்சார் கண்காணிப்பு பற்றி, ஒரு இளம் விமானிக்கு அவுட்சோர்ஸ் மூலம் தகவல் கிடைத்துள்ளது" என்று தொழிற் கட்சி அரசாங்கத்தை விமர்சித்தார்.
கண்காணிப்பை உறுதிப்படுத்திய ஆஸ்திரேலிய விமானிகள்:
ஆஸ்திரேலியாவின் அவலோனில் நடந்த ஆஸ்திரேலிய சர்வதேச விமான கண்காட்சியில், ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை (RAAF) கடல்சார் கண்காணிப்பு விமானிகள், ஆஸ்திரேலியாவின் P-8A Poseidon ரோந்து விமானம் மூலம், "அதிக அதிர்வெண் கொண்ட விமானப் பயணங்கள்" பறந்து வருவதாகவும், அந்த நேரத்தில் மிக அதிக அதிர்வெண் (UHF - Ultra High Frequency), (VHF- Very High Frequency)-ல் இருக்கும் சீன கடற்படை போர்க்கப்பலின் பரிமாற்றங்களை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
"இந்த பரிமாற்றங்கள் சீனாவின் உறுதித்தன்மை மற்றும் நேரடி துப்பாக்கி பயிற்சிகளின் நோக்கம் குறித்த நிலையான எச்சரிக்கைகள் மட்டுமே" என்று பி-8 ஏ போசைடன் ரோந்து விமானத்தில் பறக்கும் அதிகாரி பேட்ரிக் மேக்ஹாம் கூறினார்.
மேலும் இது, "நாங்கள் அந்த பகுதிகளில் நேரடி துப்பாக்கி சுடும் பயிற்சியை நடத்துவோம் என்று கூறுவதற்கு ஒத்ததாகும்" என்று அவர் விவரித்தார்.
ஆஸ்திரேலியாவின் பி-8ஏ ரோந்து விமானங்கள் நீர் மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போருக்கும், ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் பயன்படுத்தப்பட்டதாக ஆர்ஏஎஃப் விமான போர் திறனின் இயக்குநர் ஜெனரல் ஏர் கமடோர் கஸ் போர்ட்டர் கூறினார்.
மேலும் அவர்,"அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க நீங்கள் 24 மணி நேரமும் ஒரு பணிக் குழுவின்கீழ் இருக்க வேண்டிய அவசியமில்லை," என்று கூறினார்.
சீனாவின் விமர்சனம்:
ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை P-8A ரோந்து விமானங்கள், தென் சீனக்கடலில் சர்வதேச கடற்பரப்பில் வழக்கமான கண்காணிப்பு ரோந்துகளை நடத்துகின்றன. இதை சீனா விமர்சித்துள்ளது.
கண்டுகொள்ளாத சீனா:
ஆஸ்திரேலிய பி-8 ஏ ரோந்து விமானத்தின் மீது, 30 மீட்டர் (100 அடி) தூரத்திற்குள் தீப்பிழம்புகளை வெளியிடும் சீன போர் விமானத்தின் "பாதுகாப்பற்ற" நடவடிக்கைகள் குறித்து ஆஸ்திரேலியா, கடந்த மாதம் சீனாவிடம் புகார் அளித்தது.

தொடர்புடையை செய்திகள்