’பஹல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள்’: பாகிஸ்தான் பத்திரிகையாளர் இக்பால்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ’பஹல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள்’: பாகிஸ்தான் பத்திரிகையாளர் இக்பால்

’பஹல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள்’: பாகிஸ்தான் பத்திரிகையாளர் இக்பால்

Marimuthu M HT Tamil Published May 19, 2025 04:25 PM IST
Marimuthu M HT Tamil
Published May 19, 2025 04:25 PM IST

பாகிஸ்தான் பத்திரிகையாளர் அப்தாப் இக்பால் அளித்த பேட்டியில், தல்ஹா அலி மற்றும் ஆசிம் ஆகிய இருவரும் பாகிஸ்தானியர்கள் மட்டுமல்ல, அவர்கள் இருவரும் பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் என்றார்.

’பஹல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள்’: பாகிஸ்தான் பத்திரிகையாளர் இக்பால்.
’பஹல்ஹாம் தாக்குதலில் ஈடுபட்ட இருவர் பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்றவர்கள்’: பாகிஸ்தான் பத்திரிகையாளர் இக்பால். (HT_PRINT)

சமீபத்தில் இந்தியாவில் பஹல்ஹாம் என்னும் சுற்றுலாத்தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியாவைச் சேர்ந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த

தாக்குதலில் ஈடுபட்ட இரு பாகிஸ்தானியர்கள், பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் அப்தாப் இக்பால் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் அப்தாப் இக்பால் அளித்த பேட்டியில், தல்ஹா அலி மற்றும் ஆசிம் ஆகிய இருவரும் பாகிஸ்தானியர்கள் மட்டுமல்ல, அவர்கள் இருவரும் பாகிஸ்தான் ராணுவத்தில் பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் என்றும், இருவரும் லஷ்கர்-இ-தொய்பா உடன் நீண்ட கால நட்பில் இருந்ததாகவும், பாகிஸ்தான் உளவுத்துறையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அவர் தல்ஹா அலி மற்றும் ஆசிம் ஆகிய இருவரும் இந்திய எல்லையைத் தாண்டி, பயங்கரவாதப் பணிகளை செய்யப் பணிக்கப்பட்டனர் என்றும், குறிப்பாக, உளவு பார்த்தல், பயங்கரவாதத்தில் ஈடுபடத்தயாராக இருத்தல் என்று கூறினார்.

பஹல்ஹாம் தாக்குதலுக்குப் பின் இருக்கும் பயங்கரவாதி ஹாஷிம் மூசா யார்?

பஹல்ஹாம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தல்ஹா அலி, ஆசிம் ஃபெளஜி, அடில் ஹூசைன் தோக்கர், அஹ்சன் ஆகியோர் என கண்டறியப்பட்டது.

அதில், தல்ஹா, ஆசிம் ஆகியோர் பாகிஸ்தானியர்கள், அஹ்சன் காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாசிம் மூசா, கடந்த ஒரு ஆண்டாக ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, குறைந்தது மூன்று தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்து இருக்கிறது.

லஷ்கர்-இ-தொய்பாவில் இணைந்த ஹாஷிம் மூசா:

அதேபோல், அவர் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றி வந்து இருக்கிறார். மேலும் ஒரு விசாரணையில் ஹாசிம் மூசா, பாகிஸ்தான் துணைப்படையின் முன்னாள் அதிகாரி என்பதும்,அதில் இருந்து நீக்கப்பட்டுதும், லஷ்கர்-இ-தொய்பாவில் சேர்ந்ததாகவும், 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் ஊடுருவியதாகவும் தெரியவருகிறது.

மேலும் மூசா காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் செயல்பட்டு, உளவு பார்த்து தாக்குதல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மூசா, முன்பே பாகிஸ்தான் துணைப்படையில் பயிற்சி பெற்றதால், அதி நவீன ஆயுதங்களைக் கையாளத்தெரியும் என்றும், ஒன்றிணைந்து சண்டைபோடுவதில் நிபுணத்துவம் பெற்றவர் எனவும், ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி கூறினார்.