இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை.. பாகிஸ்தானிடம் சீனா கூறியது என்ன?
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் கூற்றுப்படி, இந்தியா-பாகிஸ்தானின் இராணுவ பதட்டங்களைத் தொடர்ந்து உருவாகி வரும் பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை.. பாகிஸ்தானிடம் சீனா கூறியது என்ன? (AFP)
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்த இராணுவ பதட்டங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த போர்நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர், பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி இஷாக் தார், ஞாயிறன்று சீன வெளியுறவு மந்திரி வாங் யி உடன் ஒரு முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்தியா-பாகிஸ்தானின் இராணுவ பதட்டங்களைத் தொடர்ந்து வளர்ந்து வரும் பிராந்திய நிலைமையை மையமாகக் கொண்ட ஒரு சமூக ஊடக பதிவில், பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய சுதந்திரத்திற்கான தனது உறுதியான ஆதரவை சீனா மீண்டும் உறுதிப்படுத்தியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீனா, பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கட்டுப்பாடு மற்றும் நிலைமையை பொறுப்புடன் கையாண்ட விதத்தையும் சீன அமைச்சர் பாராட்டினார் என தகவல் வெளியாகியுள்ளது.