‘கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் சுமார் 40 வீரர்களை இழந்தது’: இந்திய இராணுவம் அறிவிப்பு
கவனமான கலந்துரையாடல்களுக்குப் பிறகு ஒன்பது பயங்கரவாத இலக்குகள் அடையாளம் காணப்பட்டு, அவை துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்கப்பட்டன என்று இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

‘கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் சுமார் 40 வீரர்களை இழந்தது’: இந்திய இராணுவம் அறிவிப்பு
மே 7 முதல் மே 10 வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் இராணுவம் சுமார் 40 வீரர்களை இழந்ததாக இந்திய இராணுவம் ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறியது.
இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாவது:
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதன் தாக்கம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பை ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கய், மேஜர் ஜெனரல் எஸ்.எஸ்.சர்மா மற்றும் வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் ஆகியோர் நடத்தினர்.