பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்களுக்கு பதிலடி கொடுக்க இராணுவத் தளபதிகளுக்கு முழு அதிகாரம்!
இந்தியாவின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை குறிக்கும் வகையில் ஆபரேஷன் சிந்துூர் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் ஒரு "புதிய இயல்பு நிலையை" அமைக்கிறது; இது இன்னும் முடிவடையவில்லை என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறினால் பதிலடி கொடுக்க இராணுவத் தளபதிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இது சனிக்கிழமை நடைபெற்ற டிஜிஎம்ஓ அளவிலான பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட உடன்படிக்கையை குறிக்கிறது.
விமானப்படைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி இராணுவத் தளபதிகளுடன் நடத்திய ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது.
எக்ஸ் தளத்தில் ராணுவம் வெளியிட்ட பதிவில், “மே 10-11 தேதிகளில் போர் நிறுத்தம் மற்றும் வான்வெளி மீறல்களைத் தொடர்ந்து, ஜெனரல் உபேந்திர திவிவேதி, COAS மேற்கு எல்லைகளின் இராணுவத் தளபதிகளுடன் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்தார். மே 10, 2025 அன்று நடைபெற்ற DGMO பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்பட்ட உடன்படிக்கையின் எந்த மீறலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இராணுவத் தளபதிகளுக்கு COAS முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.